மலாக்கா சிஎம்: விசாரணைக்கு உதவினேன், விசாரணை என்மீதல்ல

cmமலாக்கா     முதலமைச்சர்   இட்ரிஸ்    ஹருன்,    மலேசிய  ஊழல்தடுப்பு    ஆணையம் (எம்ஏசிசி)  மலாக்காவில்   பல     அரசு    அதிகாரிகள்மீது   விசாரணை     மேற்கொண்டுள்ளது   என்றும்     அவர்களின்   விசாரணைகளுக்குத்    தாம்    உதவியதாகவும்  இன்று   கூறினார்.

நேற்று   அவரது   அலுவலகத்துக்கு    எம்ஏசிசி    சென்று   சிஎம்மிடம்   விசாரணை    செய்ததாக   வெளிவந்துள்ள   நாளிதழ்     செய்தி    குறித்து     அவர்   விளக்கமளித்தார்.

“ஒன்றரை   மாதங்களுக்கு  முந்திய     விவகாரங்கள்  குறித்து   விசாரிக்க   எம்ஏசிசி   அதிகாரிகள்    வந்தனர்.   முதலமைச்சர்      என்ற    முறையில்    அவ்விவகாரங்கள்    பற்றி   அறிந்திருந்த    நான்    அவர்களின் விசாரணைக்குத்   தேவையான   தகவல்களை    அளித்து    உதவினேன்.

“விசாரணை   என்மீதல்ல.  என்னை   விசாரிப்பதாக    இருந்தால்    அவர்களின்  அணுகுமுறை   வேறு  விதமாக   இருந்திருக்கும்”,  என்று    இட்ரிஸ்   ஹருன்    செய்தியாளர்களிடம்   தெரிவித்தார்.