‘எதிரணி சீனாவை எதிர்க்கவில்லை; பொருளாதார ஏகபோகத்தைத்தான் எதிர்க்கிறது’

bahrinமலேசியாவில்   சீனாவின்  முதலீடு    குறித்தும்     அவ்வல்லரசிடம்     பேரம்    பேசப்படும்  முறை  குறித்தும்    கேள்வி    எழுப்புவதை    வைத்து    எதிரணி    சீனாவுக்கு   எதிரி    என்று   கூறப்படுவதை     அமனா   எம்பி   ஒருவர்   மறுக்கிறார்.

எதிரணியைக்  களங்கப்படுத்த    எண்ணுவோர்   இந்த   விவகாரத்தைப்   போட்டுக்  குழப்புகிறார்கள்    என      கோலா   திரெங்கானு    நாடாளுமன்ற   உறுப்பினர்    ராஜா   பஹ்ரின்   ஷா   கூறினார்.

“நாங்கள்   சீனாவுக்கு   எதிரிகள்   அல்லர்.  ஆனால்,  எந்த   நாடும்  பொருளாதார   ஏகபோகம்    பெற்று    ஆதிக்கம்   செலுத்துவதையும்   மலேசியா    அந்த   நாட்டையே    அதிகம்     நம்பியிருப்பதையும்   நாங்கள்   விரும்பவில்லை”,  என்றவர்   இன்று   ஓர்    அறிக்கையில்    கூறினார்.

எதிரணி   சீனா- எதிர்ப்பு    உணர்வைப்  பரப்பி  வருகிறது    என்ற   ஆளும்   கட்சியின்   குற்றஞ்சாட்டுக்குப்    பதிலளித்த    ராஜா  பஹ்ரின்,   ஆட்சியில்   இருப்பவர்கள்    சீனாவின்   வளத்தைக்   கொண்டு   ஆட்சியில்     தொடர்ந்து  ஒட்டிக்கொண்டிருக்க   விரும்புகிறார்கள்,   அதற்காக   மலேசியாவின்   நலன்களைத்  தாரை  வார்க்கவும்    தயாராக    இருக்கிறார்கள்  என்றார்.

 

SHARE THIS STORY :    

RELATED POSTS

No related posts found!

   

உங்கள் கருத்துகளை பதிவுசெய்யுங்கள் (Share Your Comments)

விதிமுறைகள்: கருத்து ஆபாசமானதாக, அருவருக்கத்தக்கதாக, பிறரை அல்லது பிறரது சமயத்தை, சமூகத்தை இழிவுபடுத்துவதாக இருக்கக்கூடாது. அவ்வாறான கருத்துகள் அனுமதிக்கப்படாது. கருத்து சுருக்கமாகவும் பொறுப்புடனும் தெரிவிக்கப்பட வேண்டும். நீங்கள் பதிவு செய்யும் கருத்துக்கு நீங்களே முழு பொறுப்பாளி.

  • மு.த.நீலவாணன் wrote on 13 January, 2017, 1:15

    மிக சரியாக சொல்கிறார் அமானா எம்.பி. பணக்காரனும் சரி, பணக்கார நாடும் சரி தன்னை விட ஆற்றல் குறைந்தோரை தன் காலடியில் வைத்துகொள்ளவே விரும்பும்.

கருத்துகளை தமிழில் தட்டச்சு செய்ய முடியும். உதாரணம் : "amma" என்று டைப் செய்து SPACEBAR-ஐ அழுத்தினால் "அம்மா" என்று தோன்றும் (Press Ctrl+g to toggle between English and Tamil)