14 ஆவது பொதுத் தேர்தலில் பிஎன் வெற்றி பெறும் என்று ஜோமோவும் கூறுகிறார்

 

jomo1மிகப் பிரசித்தி பெற்ற பொருளாதார வல்லுனரான ஜோமோ கவாம் சுந்தரம் எதிர்வரும் பொதுத் தேர்தலில் பாரிசான் நேசனல் வெற்றி பெரும் என்று ஆருடம் கூறியுள்ளார்.

புது வருடத்தில் ஆருடம் கூறுவது வழக்கமான ஒன்று கூறிய ஜோமோ, ஏப்ரலில் பொதுத் தேர்தல் நடைபெறும் என்றும் அத்தேர்தலில் எதிரணி தோல்வி அடையும், பிஎன் வெற்றி பெறும் என்றும் இன்று கோலாலம்பூரில் நடைபெற்ற ஒரு கலந்துரையாடலில் கூறினார்.

எதிர்கட்சிகள் இன்னும் ஒரு நம்பத்தக்க மாற்றாக உருவெடுக்காமல் இருப்பது அவருடைய ஆருடத்திற்கு ஒரு பகுதி அடிப்படையாகும்.

அவர்கள் இன்னும் ஒன்றிணைந்து செயல்படவில்லை, அவர்கள் தேர்தல் காலத்திற்கு கடுமையாக ஒழைக்கத் தயாராகவில்லை என்றாரவர்.

மேலும், எதிரணி பிளவுபட்டுக்கிடக்கிறது. அதன் தலைவர்கள் தங்களுடைய சொந்த கட்சிக்குள்ளும் மற்றும் ஒருவர் மற்றொருவருடன் மோதிக்கொண்டும் இருக்கின்றனரே தவிர இப்பெரிய விவகாரத்தில் கவனம் செலுத்தவில்லை என்பதை ஜோமோ சுட்டிக்காட்டினார்.

அவர்கள் பாரபட்சமான அமைவுமுறைக்கு எதிராகக் கூச்சலிட்டாலும் அவர்கள் அதில் சிக்கிக் கொண்டுள்ளனர் என்பதைத் தெளிவுப்படுத்திய ஜோமோ, இப்போது பலர் அந்த பாரபட்சமான அமைவுமுறையைக் குறைகூறினாலும் அந்த அமைவுமுறையை உருவாக்கியதில் அவர்களுக்கும் ஓரளவு பொறுப்பு உண்டு என்றார்.

“நம்மிடம் இருக்கும் அமைவுமுறைக்கு ஏற்ப நாம் வேலை செய்ய வேண்டும்”, என்று உலகிலுள்ள பல பல்கலைக்கழகங்களில் பொருளாதாரம் போதித்தவரும் ஐக்கிய நாட்டு மன்றத்தில் பல உயர்பதவிகளை வகித்தவருமான ஜோமோ கூறினார்.

அதே கலந்துரையாடலில் உரையாற்றிய டாஸ்மானியா பல்கலைக்கழகத்தின் ஆசியா இன்ஸ்டிட்டியுட் இயக்குனர் ஜேம்ஸ் சின் எதிரணி பிளவுபட்டுக்கிடப்பதால் பிஎன் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் வெற்றி பெறும் என்றார்.

மலேசியா பல்கலைக்கழகம் சரவாக் பேராசிரியர் ஜெனிரி அமிர் பிரதமர் நஜிப்பின் நிருவாகத்திற்கு பல பிரச்சனைகள் இருந்த போதிலும் நகர்புற மத்திய வர்க்க வாக்காளர்களால் அலையை மாற்ற முடியாது என்றார்.