ஸ்ரீமாவோ அரசே: தான்தோன்றி தனமாக செயற்பட்டது..! விக்கி குற்றம்

Sri_Lanka_North_Eastern_Provinceவடக்கு கிழக்கு இணைப்பானது எம்மால் தான்தோன்றி தனமாக எடுக்கப்பட்ட முடிவு அல்ல என வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியிருந்தார்.

வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் உரையாற்றும் மாபெரும் பொதுக்கூட்டம் இன்று கனடாவில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

18 வருடங்கள் மேல் இருந்தே இந்த வடக்கு கிழக்கு இணைப்பு கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும் எனவே அது தான்தோன்றி தனமாக எடுக்கப்பட்ட விடையம் இல்லை என தெரிவித்தார்.

மேலும் தமிழர்கள் பகுதியில் அத்துமீறிய குடியிருப்பை மேற்கொள்ள அன்றைய ஸ்ரீமாவோ அரசு கண்ணும் கருத்துமாக இருந்தது. கிழக்கில் சிங்கள மக்களை வேண்டும் என்றே அரசு கொண்டுவந்து குடியேற்றியது. என குற்றம் சாட்டினார்.

அவ்வாறு குடியேறிய சிங்கள மக்கள் தன்னிடம் கூறும் போது தமிழர்கள் வாழும் பகுதியை உங்களுடையதாக்கி கொள்ளுமாறும் பலாத்காரமாகவே தங்களை கொண்டு வந்து அரசாங்கம் குடியேற்றினார்கள் என தெரிவித்தனர்.

அதன் பின்னர் அரசாங்கமானது தமக்கு தண்ணீர் வசதியோ, வேறு எந்தவித வசதிகளையோ செய்து தரவில்லை. அரசின் இந்த எண்ணத்தை நிறைவேற்ற தாங்களா கிடைத்தோம் என அவர்கள் கவலையடைந்ததாக தெரிவித்தார்.

மேலும் இவற்றை எல்லாம் அன்று இருந்த தமிழ் தலைமைகள் தடுக்காதமையே இன்று கிழக்கில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் சிங்கள மக்கள் உள்ளனர்.

வடக்கு கிழக்கில் தமிழர்கள் இன்றும் கூட இராணுவத்தினரின் உதவியுடன் அடித்து துரத்தப்படுகின்றார்கள். தற்போது கூட அகதிகளாக சென்று மீண்டும் நாட்டினை வந்தடைந்தவர்களுடைய இடங்கள் சிங்கள மக்களிடம் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கு “தாங்கள் உங்களுக்கு வேறு இடத்தில் காணிகளை தருகின்றோம்” என்று மத்திய அரசாங்க அலுவலர்கள் கூறுகின்றார்கள், இவ்வாறு எல்லாம் பற்றி பேசினால் எங்களை இனவாதி என முத்திரை குத்துவதாக முதல்வர் குற்றம் சுமத்தினார்.

-http://www.tamilwin.com

TAGS: