தஞ்சையில் தடையை மீறி ஜல்லிக்கட்டு… 20 காளைகளை பிடித்து இளைஞர்கள் ஆராவாராம்

jallikattu_tanjaiதஞ்சை: ஜல்லிக்கட்டு இல்லாமல் பொங்கல் திருவிழா நிறைவேறாது என்று கூறி இன்று தஞ்சையில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில் இளைஞர்கள் பலர் கலந்து கொண்டு காளைகளை அடக்கினார்கள். பொங்கல் திருவிழாவின் போது, ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்றும் அதன் மீதான தடையை நீக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு முழுக்க போராட்டங்கள் கொழுந்துவிட்டு எரிந்தும், மத்திய அரசு அதுதொடர்பான அவசரச் சட்டத்தை கொண்டு வரவில்லை. உச்ச நீதிமன்றமும், இதுதொடர்பான வழக்கில் இடைக்கால தீர்ப்பு எதனையும் வழங்க முடியாது என்று கைவிரித்து விட்டது.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது. மதுரையில் பாலமேடு, அலங்காநல்லூர் உள்ளிட்டப் பகுதிகளில் தடையை மீறி ஜல்லிக்கட்டுப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இதனைத் தொடர்ந்து, மாட்டுப் பொங்கலான இன்று தஞ்சாவூரில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடைபெற்றது. தஞ்சை புதுவன்சாவடியில் உள்ள மைதானத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதற்கென பிரத்தேயகமாக வாடிவாசல் அமைக்கப்பட்டது. இதில் 20க்கும் மேற்பட்ட காளைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன.

தடையை மீறி நடத்தப்பட்ட இந்த ஜல்லிக்கட்டில் நூற்றுக்கணக்கான மாடுபிடி இளைஞர்கள் கலந்து கொண்டு காளைகளை விரட்டிப் பிடித்தனர். இதனால் அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

tamil.oneindia.com

TAGS: