சீனாவின் போலீஸ் நடவடிக்கைகளைப் புகழும் ஜாஹிட்டைச் சாடினார் எம்பி

mp surenஐயா,  குற்றங்களை    எதிர்த்துப்  போராட   சீனா  பின்பற்றும்  முறைகளைப்  புகழ்ந்துரைக்கிறீர்களே    அப்படிப்  புகழ்ந்துரைக்க     ஒரு  ஜனநாயக     நாட்டைத்    தேர்ந்தெடுத்திருக்கக்  கூடாதா    என்று   எதிரணி   எம்பி   ஒருவர் துணைப்   பிரதமர்   அஹ்மட்   ஜாஹிட்  ஹமிடியை   நோக்கி   வினவுகிறார்.

“நாம்   பிரமிப்பதற்கோ  கற்றுக்கொள்ளவோ   சீனா   ஒரு    முன்மாதிரி   நாடல்ல.

“அது    சட்ட   ஆளுமையைப்  பின்பற்றாத,   மிக   மோசமான   மனித  உரிமை  மீறல்கள்   நிகழும்  ஒரு   நாடு”,  என   பாடாங்   செறாய்   எம்பி   என்..சுரேந்திரன்   இன்று   ஓர்    அறிக்கையில்   கூறினார்.

“சீனாவின்   விழுமியங்களும்   ஆட்சிமுறைகளும்    ஒரு  சுயமரியாதையுள்ள  ஜனநாயக     நாட்டுக்கு   நேர்   எதிரானவை.

“அது   ஒரு-கட்சி   நாடு. ஜனநாயகத்தைப்   பின்பற்றுவதில்லை,  தேர்தல்களையும்   நடத்துவதில்லை”,  என்றாரவர்.