பெர்சத்து தொடக்கவிழாவுக்குப் பேராளரை அனுப்பாதது ஏன்? பாஸுக்கு மாபுஸ் கண்டனம்

mafuzகடந்த   வார  இறுதியில்   பார்டி  பிரிபூமி  பெர்சத்து  மலேசியா(பெர்சத்து)   அதிகாரப்பூர்வ   தொடக்க  விழாவுக்கு   ஒரு   பேராளரைக்கூட   அனுப்பி   வைக்காத   பாஸ்  கட்சியை    மாபுஸ்   ஒமார்   கடிந்து   கொண்டார்.

பாஸ்   கட்சி      எதிரணிக்  கூட்டணியுடன்   உறவு    வைத்துக்கொள்ள   வேண்டும்    என்றுதான்  மக்கள்    விரும்புகிறார்கள்.  ஆனால்,  பாஸ்   பேராளரை   அனுப்பி  வைக்காதது   அது    எதிரணிக்  கூட்டணியுடன்   உறவு  வைத்துக்கொள்ள   விரும்பவில்லை   என்ற   எண்ணத்தைத்   தோற்றுவிக்கிறது    என்று   பாஸ்   எம்பியும்    அதன்  முன்னாள்   உதவித்   தலைவருமான   மாபுஸ்  கூறினார்.

“அது  தப்பு”,  என்றவர்   சினார்  ஹரியானிடம்   தெரிவித்தார்.

பெர்சத்துவின்    அதிகாரப்பூர்வ   தொடக்க   விழாவில்   கலந்து  கொண்ட   ஒரே பாஸ்    தலைவர்   பொக்கோக்   சேனா   எம்பி   மட்டுமே.  மற்ற   பாஸ்   தலைவர்களுக்கும்   இருக்கைகள்   ஒதுக்கப்பட்டிருந்தன. ஆனால்,  அவர்கள்  வரவில்லை.

தொடக்க  விழாவுக்குத்     தமக்கு    அழைப்பு    வந்திருந்ததாக   மாபுஸ்   கூறினார்.

“அதில்  கலந்துகொள்ளப்   போவதாக   நான்   பாஸ்   தலைமையிடம்    தெரிவிக்கவில்லை.  தனிப்பட்ட   முறையில்தான்    அதில்   கலந்து   கொண்டேன்”,  என்றாரவர்.