ஷெல் நிலையங்களில் எண்ணெய் நிரப்ப முடியவில்லை?

petrolஷெல்   பெட்ரோல்   நிலையங்கள்  பல   தொழில்நுட்ப    கோளாறுகளை    எதிர்நோக்கி   வருகின்றன.  அதன்  விளைவாக    பல   நிலையங்களில்   ஊர்திகளுக்கு   எண்ணெய்   நிரப்ப  முடியவில்லை.

ஆனால்,  அதன்   காரணமாக    நாட்டில்   உள்ள   எல்லா   ஷெல்   நிலையங்களும்   மூடப்பட்டு   விட்டதாக     கூறும்   ஊடகச்   செய்தியை  ஷெல்   மலேசியா    பேச்சாளர்    ஈவோன்  சங்   மறுத்தார்.

“சில   நிலையங்களில்    இணைய   இணைப்பு  இல்லை(அதனால்   எண்ணெய்   நிரப்ப  முடிவதில்லை) .  சிலவற்றில்  ரொக்கம்   கொடுத்து  எண்ணெய்  நிரப்பிக்  கொள்ளலாம்.  எல்லா   நிலையங்களும்   மூடப்பட்டதாகக்   கூறுவது   உண்மையல்ல”,  என்றார்.

“பிரச்னை  இப்போது  சரிசெய்யப்பட்டு   வருகிறது”,  என்றவர்    மலேசியாகினியிடம்   தெரிவித்தார்.