தடை செய்யப்பட வேண்டியவை லாரிகள், மோட்டார் சைக்கிள்கள் அல்ல- வான் ஜுனாய்டி

junadiகோலாலும்பூர்   மையப்பகுதியில்   கரியமில    வாயு    வெளியேற்றத்தைக்   குறைக்க    சிறுரக   மோட்டார் சைக்கிள்களை தடைசெய்யும்    கருத்தை   இயற்கை  வள,  சுற்றுச்சூழல்     அமைச்சர்   வான்   ஜுனாய்டி    துவாங்கு  ஜப்பார்    ஏற்கவில்லை.

“அவற்றால்(மோட்டார்  சைக்கிள்கள்)  ஏற்படும்   தூய்மைக்கேடு   சிறிதுதான்.  பெரிய  ஊர்திகள்தாம்   தூய்மைக்கேட்டுக்குக்   காரணம்.

“சிறிய  வாகனங்களைத்   தடை   செய்ய   வேண்டுமா  என்பது   எனக்குத்   தெரியாது.  ஆனால்,  பெரிய   லாரிகளைத்   தடை   செய்ய   வேண்டும்”,  என   வான்  ஜுனாய்டி  கூறினார்.

கூட்டரசுப்    பிரதேச அமைச்சர் துங்கு அட்னான்   துங்கு   மன்சூர்  நகர  மையப்  பகுதிகளில்   ‘கப்சாய்’களைத்   தடை    செய்ய   வேண்டும்   என்று   கூறியிருந்ததற்கு   எதிர்வினையாக   வான்  ஜுனாய்டி   இவ்வாறு   கூறினார்.

இவ்விவகாரத்தில்   ஒரு  முடிவெடுப்பதற்குமுன்   அறிவியல்   ஆய்வு   ஒன்று   தேவை    என்றும்  அவர்   சொன்னார்