சுங்கை ஆயர் தாவார் சட்டமன்ற உறுப்பினர் காலமானார்

air tawarபாரிசான்   நேசனலின்   சுங்கை   ஆயர் தாவார்   தொகுதி சட்டமன்ற உறுப்பினர்   கமாருல்   ஸாக்கி அப்துல் மாலிக், 58,   இன்று காலை   சாபா   பெர்ணாமில்  அவரது இல்லத்தில்   காலமானார்.

இன்று காலை     அவரது   தொகுதியில்    நடைபெறவிருந்த  நிகழ்வுக்கு    அவரை   அழைத்து   வர  அவரது  இல்லம்     சென்றபோது    அவரின்   கார்  ஓட்டுனர்  முகம்மட்   சுபாட்   சலிமினுக்கு    அவர்   இறந்துபோனது    தெரிய  வந்தது.

கமருல்  ஜகி   வீட்டை  வெளியே  வராததைக்  கண்ட    முகம்மட்  சுபாட்,  வீட்டை   உடைத்துக்  கொண்டு   உள்ளே   செல்ல   வேண்டியதாயிற்று. உள்ளே  சட்டமன்ற   உறுப்பினர்   உணர்வற்றுக்   கிடந்திருக்கிறார்.

கமருல்  ஜகியின்   இறப்பை     சாபா   பெர்ணம்    மாவட்ட  போலீஸ்   தலைவர்   நோர்   அஸ்மியும்   உறுதிப்படுத்தினார்.

கமருல்  ஜகி   கடந்த    பொதுத்   தேர்தலில்   1,416  வாக்குகள்   கூடுதலாக   பெற்று   பாஸ்   வேட்பாளர்    வாஹிட்   ரயிசைத்   தோற்கடித்தார்.

-பெர்னாமா