மகாதிர்: நான் ராஜத் துரோகியா? அப்படியே ஆகட்டும்

Mreplies

முன்னாள் பிரதமர் மகாதிர் வரம்பை மீறி விட்டார் என்று ஜோகூர் சுல்தான் இப்ராகிம் இஸ்கந்தார் கூறியிருந்த குற்றச்சாட்டிற்கான பதிலை மகாதிர் கடிதத்தில் எழுதியுள்ளார்.

இன்றைய த ஸ்டார் நாளிதழில் பக்கம் 33, கடிதங்கள் பகுதியில் மகாதிரின் கடிதம் வெளியிடப்பட்டுள்ளது. அக்கடிதத்தில், சுல்தான் தமக்கு சவால் விட்டாரா அல்லது அந்த ஆங்கில நாளிதழ் சுல்தானின் கருத்திற்கு அவ்வாறான அர்த்தம் கொடுத்ததா என்பது பற்றி தமக்கு உறுதியாகத் தெரியவில்லை என்று மகாதிர் கூறுகிறார்.

ஆனால், மேன்மைதங்கிய சுல்தான் தமக்கு சவால் விட்டதாக கூறுவதை மறுத்தாலன்றி, “த ஸ்டார் வெளியிட்டுள்ள அறிக்கையை நான் உண்மையானது என்று எடுத்துக்கொள்கிறேன், என்று மகாதிர் கூறியதோடு தாம் பாதிக்கப்படும் சூழ்நிலையில் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

“மக்கள் என்னைப் பற்றி அவர்கள் விரும்புவதைக் கூறும் அதே வேளையிலே, மற்றும் அவ்வாறு கூறுவதற்கான அவர்களின் சுதந்திரத்தை நான் வரவேற்கிறேன், நான் மேன்மைதங்கிய சுல்தானின் சவாலுக்கு பதில் அளிப்பதற்காக என்னை கைது செய்து வழக்காடாமல் சிறையிலடைக்க மாட்டார்கள் என்று நம்புகிறேன்.

“அது வழக்குடனானது என்றால், நான் கைது செய்யப்படுவதை வரவேற்கிறேன்”, என்று மேலும் கூறினார்.

சுல்தானுக்கு சினத்தை ஏற்படுத்திய தமது அறிக்கை ஜோகூர் மேம்பாட்டுத் திட்டங்கள் பற்றி புலும்பெர்க் (Bloomberg) வெளியிட்டிருந்த அறிக்கையைத் தாம் மீண்டும் வெளியிட்டததைத் தவிர வேறொன்றுமில்லை என்று மாகாதிரி தெரிவித்துள்ளார்.

“கடந்த ஆண்டு, நவம்பர் 22 இல் அறிக்கையில் புலும்பர்க் என்ன சொல்கிறது?

“அந்த அறிக்கை சொல்கிறது சீனாவின் சீன நிறுவனங்கள் ஜேபியில் ஃபோரஸ்ட் சிட்டியை கட்டும், அது 700,000 பேருக்கு இடம் உண்டாக்கும். பெரிய அளவிலான ஃபோரஸ்ட் சிட்டியின் மாதிரியைப் (படங்களுடன்) பார்ப்பதற்காக விமானங்களில் சீனாவின் சீனர்கள் கொண்டுவரப்படுகின்றனர். அந்த சிட்டியிலுள்ள பெரும்பாலான சொத்துக்களை அவர்கள் வாங்குவார்கள்.

“அதிகமான ஜோகூர் மலாய்க்காரர்களும் சீனர்களும் இந்த அடுக்ககங்களை வாங்குகிறார்கள் அல்லது வாங்கப் போகிறார்கள் என்பதில் எனக்கு ஐயமே. இந்தச் சொந்துக்கள் அனைத்தையும் வாங்குவதற்கு அவ்வளவான மலேசியர்கள் இல்லை.

“ஃபோரஸ்ட் சிட்டி போன்ற இன்னும் 60 மற்ற மேம்பாட்டுத் திட்டங்கள் இருக்கின்றன என்று அதே புலும்பெர்க் அறிக்கை கூறுக்கிறது. இந்தச் சொத்துகளும் சீனாவின் சீனர்களுக்கே விற்கப்பட்டு வருகின்றன”, என்றார் மகாதிர்.

“ஜோகூரின் பகுதி இப்போது அந்நிய நாடு”

பினோக்கி 1819 ஆண்டைப் பார்க்கையில், ஜோகூரின் சுல்தான் அலி சிங்கப்பூரை பிரிட்டீஷாருக்கு குத்தகைக்கு விடவில்லை, தெமெங்கோங் அந்த குத்தகையில் கையொப்பமிட்டார்.

“இன்று சிங்கப்பூரைப் பாருங்கள். ஜோகூரின் ஒரு பகுதி இப்போது ஓர் அந்நிய நாடு – மிக மேம்பாடடைந்துள்ளது சந்தேகமில்லை, ஆனால், அது ஓர் அந்நிய நாடு”, என்கிறார் மகாதிர்.

ஜேபி ஃபோரஸ்ட் சிட்டி மற்றும் இதர 60 மேம்பாட்டுத் திட்டங்களில் ஒரு மில்லியனுக்கும் கூடுதலான அந்நியர்கள் வாழ்வார்கள் என்று மகாதிர் சுட்டிக் காட்டுகிறார்.

இந்தப் புதிய இடங்கள் அந்நிய நாடாகாத போதிலும் அவ்விடங்களில் அளவுக்கு மீறிய விழுக்காட்டில் அந்நியர்கள் இருப்பார்கள் என்கிறார் மகாதிர்.

“அவர்கள் நீண்ட காலத்திற்கு தங்கியிருந்தால், அவர்கள் மலேசிய குடிமக்களாகும் உரிமையைப் பெறுவார்கள்”, என்றாரவர்.

தாம் வெளிநாட்டு மூலதனத்தை வரவேற்றதை ஒப்புக்கொண்ட மகாதிர், அது மலேசியாவில் நிலம் வாங்குவது, அதை மேம்படுத்தி அந்நியர்களுக்கு விற்பது -அவர்கள் இங்கேயே தங்கிவிடுவார்கள் – பற்றியதல்ல என்றார்.

எப்டிஐ என்பது உற்பத்தி செய்யும் தொழிலில் முதலீடு செய்வதாகும். மலேசிய நிறுவனங்கள் கட்டடங்களைக் கட்டுவர், மலேசியர்கள் தொழில்களில் வேலை செய்வார்கள். அவர்கள் தொழிற்திறனைக் கற்று அவர்களின் சொந்த உற்பத்தி தொழிகளில் ஈடுபடுவார்கள்.

மலேசியக் குத்ததையாளர்கள் கட்டடங்கள் கட்டுவது, நிலங்களை மேம்படுத்துவது ஆகிய அனைத்தையும் செய்யும் முழுத் திறனையும் பெற்றிருக்கின்றனர். இதைச் செய்வதற்கு நமக்கு அந்நியர்கள் தேவையில்லை. மலேசியாவை இன்று பாருங்கள். 90 விழுக்காடு அல்லது அதற்கும் கூடுதலான புதிய கட்டடங்கள் மற்றும் மேம்பாடுகளை மலேசிய நிறுவனங்கள் செய்துள்ளன. அவற்றை வாங்கியவர்களில் பெரும்பாலானோர் மலேசியர்கள், அவர்கள் இங்கே இருக்கப்போகிறவர்கள் என்று மகாதிர் மேலும் விளக்கினார்.

“ஆனால், அந்நியர்கள் நிலத்தை வாங்கினால், முதலீடு உள்ளே வருவதுகூட இல்லை. அதிகப்படியான நிதி உள்ளூரிலேயே பெறப்படுகிறது. அவர்களின் வாணிபத்தை அவர்களின் வங்கிகள் மூலமாகவே நடத்துகின்றனர்”, என்று மகாதிர் மேலும் கூறினார்.

மேலும், வெளிநாட்டு நிறுவனங்கள் அவை சம்பாதித்ததை அவர்களின் நாட்டிற்கே அனுப்பிவிடுவதால், முதலீடு வெளியேறுகிறது என்றாரவர்.

வெளிப்படையாக இருங்கள், ஆவணங்களை வெளியிடுங்கள்

அனைத்து தொழில்நடைமுறைகளும் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்று மகாதிர் கேட்டுக்கொண்டார்.

முதலீடுகள் பற்றிய அனைத்து ஆவணங்களையும் வெளியிட வேண்டும் – தொழிலாளர்களின் எண்ணிக்கை, அவர்களின் சொந்த நாடுகள், வாங்குகிறவர்கள், நிதி அளிக்கும் வங்கிகள் மற்றும் நிதி வெளியில் அனுப்பப்படுவது. இதை நேர்மையுடன் செய்யுங்கள். எதையும் மறைக்க வேண்டாம்.

அனைத்து ஆவணங்களை மக்கள் பார்க்கட்டும் என்றாரவர்.

“மலேசியா ஒரு நிலையான நாடு ஏனென்றால் நாம் ஒருவரை ஒருவர் நாம் இருக்கிறவாறு ஏற்றுக்கொள்கிறோம். நான் பிரதமராக இருந்த 22 ஆண்டு காலத்தில் எவ்வித குறிப்பிடத்தக்க இனவாத மோதல்களும் இல்லை. வேறுபாடுகள், ஆம், ஆனால் வன்முறை இல்லை. நாடு முன்னேற்றம் கண்டது.

“நான் ஓர் இனவாதியாக இருந்திருந்தால், நாடு பெரும் கொந்தளிப்பையும் பின்னடைவையும் கண்டிருக்கும்”, என்றாரவர்.

“நான் கெடாவில் பிறந்த ஒரு மலேசியன். மலேசியா எனது தாயகம் மற்றும் எனது விசுவாசத்தின் குறிக்கோள். நான் கூறியவற்றுக்காக நான் ராஜத் துரோகி என்று குற்றம் சாட்டப்பட வேண்டுமானால், அப்படியே ஆகட்டும்”, என்றார் மகாதிர்.