பொதுசன வாக்கெடுப்பை நடத்த அரசாங்கம் தயாரா? – சிறிதரன் எம்.பி.கேள்வி

sritharan_mp_003இலங்கை அரசாங்கம் திணிக்கும் பெளத்த மேலாதிக்க சிந்தனையில் ஊற வைக்கப்பட்டஅரசியல் தீர்வினை த மிழ் தேசிய கூட்டமைப்பு ஏற்கப்போவதில்லை எனகூறியிருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்சி.சிறீதரன்வடகிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்களுடன் சிங்கள மக்கள் இணைந்து வாழ தயாரா எனஅறியும் பொதுசன வாக்கெடுப்பை நடத்த அரசாங்கம் தயாரா? எனவும் கேள்விஎழுப்பியுள்ளார்.

விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்:-புதிய அரசியல் அமைப்பின் ஊடாக இனப்பிரச்சினைக்கான தீர்வினைப் பற்றுக் கொள்ளபுதிய அரசியல் அமைப்பு சீர்திருத்தத்தின் முன் வரைபு இந்த வருடம்முன்வைக்கப்படும் என்று அரசாங்கத்தனால் கூறப்பட்டிருந்தாலும் இதுவரை அந்தமுன்வரைபு முன்வைக்கப்படவில்லை.

6 உப குழுக்களிக் அறிக்கைகள் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டு கடந்த10,11,12ம் திகதிகளில் விவாதத்திற்கு எடுக்கப்பட இருந்தது. இருப்பினும்அரசியல் அழுத்தங்கள், சிங்கள தலைவர்களுடைய அதிவேகமான இனவாத கருத்துக்கள் அந்தவிவாதங்கள் கூட முடக்கப்பட்டது.

ஜனாதிபதி கூட சமஸ்ரி என்ற சொல்லுக்கே இடமில்லை என்று சொல்லுகின்றார். பௌத்தமதத்திற்கு ஒரு அங்குலம் கூட விட்டுக் கொடுக்காமல், பௌத்த மேலாதிக்கத்தோடுஇருப்போம் என்ற செய்தியை அவர்கள் செல்லிக் கொண்டு இருக்கின்றார்கள்.

பௌத்தம் தான் முதன்மை, பௌத்த மேலதிக்கம்தான் தேவை, வடக்கு,கிழக்கு இணைப்பில்லைஎன்ற நிகழ்சி நிரலில்தான் அரசாங்கம் தன்னுடையn சயற்பாடுகளை கொண்டுவருமாகஇருந்தால், 13 ற்குள் தான் தீர்வு என்றால் அது இந்த நாட்டின்இனப்பிரச்சினைக்கும், யார் இந்த இன அழிப்புக்கு உள்ளாக்கப்பட்டார்களோஅவர்களுக்கு தீர்வு இல்லை என்பதைத்தான் அவை கோடிட்டுக் காட்டுகின்றது.

ஆனாலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும், எமது தலமையும் தமிழ மக்கள் எமக்கு தந்தஆணையின் பிரகாரம் எங்களுடைய நல்லெண்ணங்களை அவர்களுக்கு வெளிப்படுத்திவருகின்றோம்.

குறிப்பாக முழுமையான நல்லெண்ணத்தை கொடுத்திருக்கின்றோம்.நேற்றைய தினம் ராஜித சேனாரட்ன குறிப்பிட்டுள்ளார் 2018 க்குள் தீர்வு என்று.

இவரைத் தொடர்ந்து அடுத்த வருடம் இன்னுமொரு அமைச்சர் சொல்லுவார் 2019 ற்குள்தீர்வு என்று.

இப்படியே ஒவ்வொருவரும் ஆண்டுகளை சொல்லி, காலங்களை இழுத்தடிக்கின்றவிடயங்களைத்தான் செய்கின்றார்களே தவிர தீர்வுகளை தருகின்ற எண்ணம் அவர்களிடம்இல்லை.

நேற்றைய தினம் கூறிய திலங்க சுமதிபாலவுடைய கருத்தும் கூட ஒரு சமஸ்டி அடைப்படையிலேயோ அல்லது 13 க்கு அப்பால் எந்த விடயத்தினையும் நீங்கள் கேட்கவேண்டிய அவசியம் இல்லை என்பது போல தமிழ் மக்களை நோகடிக்கின்ற விடயங்களை தான்அவர் சொல்லியிருக்கின்றார்.

தமிழர்களை பொறுத்தவரையில் அவர்களுடைய வடக்கு கிழக்கு இணைந்த தாயக மண்ணில்அவர்களுடைய இறைமையின் அடிப்படையில் தீர்வு முன்வைக்காத வகையில் தமிழர்கள்தொடர்ந்து இந்த கோரிக்கைகளை வெல்வதற்கான அரசியல் தீர்வினை பெற்றுக்கொள்வதற்கான முழு முயற்சிகளையும் சர்வதேச அங்கீகாரத்துடன் முன்னெடுப்பார்கள்.

அரசாங்கம் இதிலே நல்ணெண்னத்தை வெளிப்படுத்தவில்லை என்றால், சிங்களவர்களோடுதமிழர்கள் சேர்நது வாழ முடியாது என்ற நிலைப்பாட்டில்தான் தமிழர்கள்இருக்கின்றாரகள்.

எனவே சிங்களவர்களோடு வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் சேர்ந்து வாழமுடியுமா என்ற பொதுஜன வாக்கெடுப்பை நடாத்துவதற்கு அரசாங்கம் தயாராகவேண்டும்.

பிரச்சினைக்குரியவர்கள்தான் தங்களுக்கான தீர்வினை முன்வைக்க வேண்டும். யார்பிரச்சினையை கொடுத்தவர்களோ? யார் துன்பங்களை கொடுத்தார்களோ? யார் எங்களைஅடக்கி ஆண்டார்களோ? அவர்கள் தீர்வு சொன்னால் அது உரிய தீர்வாக அமையாது.

பிரச்சினையால் பாதிக்கப்பட்டவன், இன அழிப்புக்கு உள்ளாக்கப்பட்டவன்தான் தனக்குவேண்டிய தீர்வினை கேட்பதற்கு உரிமை உடையவன். அதனை இந்த அரசாங்கம் புரிந்துகொள்ள வேண்டும்.

அரசியல் கைதிகளின் விடுதலை, நில விடுவிப்பு தொடர்பில் எமக்கு தந்தவாக்குறுதிகளை அரசாங்கம் மீறியுள்ளது.

குறிப்பாக பொருத்து வீட்டை கொண்டு வந்து தமிழர்களையும் தமிழ் தேசியக்கூட்டமைப்பினையும் பிரிக்கும் செயற்பாடுகளில் அரசாங்கம் ஈடுபட்டு வருகின்றது.

இது மட்டுமல்லாமல் கல்வி,பொருளாதாரம் போன்றவற்றில் வடக்கு மாகாண சபையினை இயங்கவிடாமல் அரசாங்கம் முடக்குகின்றது.இவற்றை வைத்து பார்க்கும் போது பிரச்சினையை தீர்ககாமல் மேலும் வேவ்வேறுபிரச்சினைகளை தோற்றுவிப்பதில் அரசாங்கம் முனைந்துள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் இருந்து காலத்தில் நடத்தப்பட்டபேச்சுவார்த்தைகளிலும் அப்போது இருந்த அரசாங்கம் பயன்படுத்திய யுத்திகளை இந்தஅரசாங்கமும் கையாண்டு வருகின்றது.

தீர்வினை முன்வைக்காமல் காலத்த இழுத்தடிக்கும் முழு முயற்சியில்தான் அரசாங்கம்முனைப்புடன் செயற்பட்டு வருகின்றது.

இதிலும் நாங்கள் தோற்றுப் போனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இராஜதந்திரதோல்வியை அடைந்திருக்கின்றது என்பதுதான் உண்மை.

நாங்கள் தோல்வியை எதிர்கொள்ள முடியாது. வெல்லுவதற்கான முழு முயற்சி களையும்மேற்கொள்கின்றோம் என்றார்.

-http://www.tamilwin.com

https://youtu.be/lBXzpTTzDk0?list=PLXDiYKtPlR7OlJxGhP_Le6eY0lwbOw4JN

TAGS: