ரஷ்ய ஜனாதிபதி மாளிகையின் மதிப்பு என்ன தெரியுமா? வெளியானது வியக்க வைக்கும் பட்டியல்

அமெரிக்க ஜனாதிபதியின் வெள்ளை மாளிகையை விடவும் ரஷ்ய ஜனாதிபதியின் கிரெம்லின் மாளிகை விலை மதிப்பு அதிகம் என்று புதிதாக வெளியாகியுள்ள பட்டியல் தெரிவிக்கின்றது.

அமெரிக்க ஜனாதிபதியின் அதிகாரபூர்வ இல்லமான வெள்ளை மாளிகையின் மதிப்பு 30 மில்லியன் பவுண்ட்ஸ் எனவும் ரஷ்ய அதிபரின் மாளிகையின் மதிப்பு ஒரு பில்லியன் பவுண்ட்ஸ் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால் வெளியாகியுள்ள இந்த பட்டியலில் வியப்புக்குள்ளாக்கும் வகையில் சீனா ஜனாதிபதியின் மாளிகை முதலிடத்தில் உள்ளது. சீனா ஜனாதிபதியின் மாளிகையான Zhongnanhai ன் மதிப்பு 31 பில்லியன் பவுண்ட்ஸ் என கூறப்படுகிறது.

இரண்டாவது இடத்தில் தென் கொரிய ஜனாதிபதி மாளிகை Cheong Wa Day உள்ளது. இதன் மதிப்பு 1.1 பில்லியன் பவுண்ட்ஸ். மூன்றாவது இடத்தில் இத்தாலிய ஜனாதிபதியின் அதிகாரப்பூர்வ மாளைகை Quirinal Palace (945 மில்லியன் பவுண்ட்ஸ்) உள்ளது. 5-வது இடத்தில் ஜப்பானின் Kantei உள்ளது.

குறித்த பட்டியலில் செல்வச்செழிப்பு மிக்க சவுதி அரேபியா அரசின் அதிகாரப்பூர்வ மாளிகையான Qasr Al Hukum 15-வது இடத்திலும் பிரித்தானிய பிரதமரின் இல்லம் 17-வது இடத்திலும் ஜேர்மன் ஜானாதிபதியின் மாளிகை 20-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒட்டுமொத்தமாக உலகின் 20 நாடுகளில் உள்ள தலைவர்களின் அதிகாரப்பூர்வ மாளிகையின் மதிப்பு பட்டியல் இது:

  1. Zhongnanhai, China (£31bn)
  2. Cheong Wa Day, South Korea, (£1.1bn)
  3. The Kremlin, Russia (£1bn)
  4. Quirinal Palace (£945 m)
  5. Kantei, Japan (£565m)
  6. Presidential Complex, Turkey (£522m)
  7. Rashtrapati Bhavan, India (£418m)
  8. The Moncloa Palace, Spain (£116m)
  9. Elysee Palace (£89m)
  10. The White House (£30m)
  11. Quinta de Olivos, Argentina(£17.9m)
  12. Palacio de ALvorada, Brazil (£15.8m)
  13. Los Pinos, Mexico (£11.8m)
  14. Mahlamba Ndlopfu, South Africa (£11.3m)
  15. Qasr Al Hukum, Saudi Arabia (£11.1m)
  16. The Lodge, Australia (£11m)
  17. 10 DOwning Street, UK (£5.4m)
  18. Merdeka Palace, Indonesia (£5m)
  19. 24 SUssex Drive, Canada (£3.5m)
  20. Chancellery, Germany (£700,000)

-http://news.lankasri.com