நஜிப்: பிஎன் தோற்றால் டிஏபிதான் ஆட்சி செய்யும்

najibஅடுத்த     பொதுத்   தேர்தலில்     பக்கத்தான்   ஹராபான்,   பார்டி   பிரிபூமி   பெர்சத்து   மலேசியா (பெர்சத்து)  கூட்டணி    வெற்றி  பெற்றால்,     டிஏபி   அரசாங்கத்தில்   உயர்ப்  பதவியை   வைத்திருக்கிறதோ   இல்லையோ,     ஆட்சி    செய்யப்போவது   அக்கட்சிதான்   என்று   பிரதமர்   நஜிப் கூறினார்.

“ஜனநாயகமும்    அரசியலும்     எண்ணிக்கையை    வைத்து    ஆடப்படும்    ஆட்டமாகும்.  அரசாங்க  உயர்  பதவி   அதற்குக்  கிடைக்காவிட்டாலும்    அதிக   இடங்களை   வைத்துள்ள   கட்சியிடம்தான்    உண்மையில்  ஆட்சி  இருக்கும்.

“எனவே,  எதிரணி   வெற்றி  பெற்றால்    ஆட்சி   செய்யப்போவது   டிஏபிதான்.

“பிகேஆர்  அல்ல,  (பார்டி  அமனா  நெகரா)  அமனா   அல்ல,   பெர்சத்து   அல்ல”,  என்று   நஜிப்  கெடாவில்    ஒரு   கூட்டத்தில்     குறிப்பிட்டதாக    த    ஸ்டார்    அறிவித்துள்ளது.

டிஏபி   தலைமையில்     நடைபெறும்   ஆட்சியின்  விளைவுகளை    கெடா  மக்கள்   எண்ணிப்  பார்க்க   வேண்டும்    என்றும்   அவர்   கேட்டுக்கொண்டார்.

கடந்த   பொதுத்   தேர்தலில்   அம்னோவுக்கு    அடுத்து   டிஏபிதான்   அதிக   இடங்களை   வென்ற   கட்சியாகும்.