அழுதாலும் விலகாத உன் இன்னலில் நீயே துவண்டது பொதும் பொங்கி எழ காலம் வந்து விட்டது!

man_writingநூறு உலகத் தலைவர்கள் எனும் புத்தகத்தில் மகாத்மா காந்திக்கு  இடமில்லாமல் போனதற்கு அப்புத்தக ஆசிரியர் கடசி பக்கத்தில் ஒரு குறிப்பை எழுதினார் ?   இந்தியாவுக்கு 15 வருடங்களுக்கு முன்பே சுதந்திரம் கிடைத்திருக்க வேண்டும் ஆனால் மகாத்மா காந்தி புரட்சி வேண்டாம் இம்சை வேண்டாம் அகிம்சையை கையாளுங்கள் என்றதால் காலம் கடந்துதான் இந்தியாவுக்கு சுதந்தத்திரம் கிடைத்தது என்றும் போராடாத சுதந்திரம் பெற்றதில் பெருமை இல்லை என்று அந்த புத்தகத்தில் குறிப்பு உள்ளது. ஆதலால் மகாத்மா காந்திக்கு இந்த உலகப்புகழ் தலைவர்கள் புத்தகத்தில் இடமில்லாமல் போனதாம்.  HE IS MR WAIT என்று மவுண்ட் பட்டர்ன் சொல்வாராம்.

12 கோடி உலகத்தமிழர்களுக்கு தாய் நிலம் தமிழர் மாநிலமாகும், வீரத்தை காளை வழியும் புலி சிங்கம் வழியும் பல கடல்களை கடந்து உலகம் முழுதும் கால்  பதித்த  சங்கெய் முழங்கு புலி கொடிகளை நாட்டிய தமிழனுக்கு சல்லி காளைகள் விளையாட்டுக்கு தடையாம்.

பக்கத்து மாநிலங்களிலில் அடியும் உதையும் இலங்கையில் உள் நாட்டு போர் என்ற நெறியற்ற மனித அழிப்பில் பல லட்சம் தமிழர்களை இழந்த தமிழினம் வீறு கொண்டு  எழும் காலம் வந்து விட்டது.  மேலே சொன்னது போல இந்துத்துவா அரசியல் ஆளுமையில் தமிழன் ஏமாந்து விட்டான். அற நெறி காத்த நமக்கு சரியா இது முறையா என்ற கேள்வி பிறந்துள்ளது.

ஏன் இந்த இழி நிலை என்று நம்மக்கு தெரிந்து தெரியாத வரலாற்று ஏடுகளை புரட்டி பார்க்க மறந்து விட்டோம். தமிழர் நாடு என்று பேருக்கு பேசி மாநிலத்து மண்ணை மாற்றான் ஏய்க்கும் வஞ்சகம் ஏன் ?

உலகம் தரகர்கள் நம மண்ணை விலை பேசி நம் இதர உரிமைகளை மெல்ல மேய்க்க நினைக்கும் நிலைமை இனி வேண்டாம். ஒரு கையில் இறை பேதம் மறு கையில்  சாதியம் கண்களில் ஏன் தமிழா இந்த கலக்கம்?

அழுதாலும் விலகாத உன் இன்னலில் நீயே துவண்டது பொது பொங்கி எழ காலம் வந்து விட்டது. உலக மனு நீதி சபைக்கு தனி நாடு கோரி முற்றுகை விண்ணப்பம் செய்யும் காலமிது ?

பிரிட்டானியமமும் அமெரிக்க வல்லரசும் என்ன இந்துத்த்வா கையாளுமல்ல…உரிமையும்  நம் கடமை உணர்ச்சியும் தட்டப்பட ஒரு தேசிய இனமாக இணைவோம். நீ எந்த கட்சியிலாவது இருந்து விட்டு போ ஆனால் குடியாட்சி  என்ற தமிழர் தேசிய உரிமை என்னும் சின்னத்தில் தூதுவனாக இணைந்து போராடுவதுதான் இந்த தமிழ் இனத்தில் நீ பிறந்த சத்திய பிரகடம்.  நீ என்று இந்தியன் இல்லை என்ற உணர்வில் பயணிக்க தயாராகுவாயோ அன்றுதான் தமிழன்னுக்கு தனி  தமிழர் நாடு என்பதை உணர்வாய் ! நிலமெல்லாம் நமக்கு வேண்டாம் நமது தொன்மை நிலம் மட்டும் நமதுநாடாகட்டும்.

விழும் முன் எழுவோம், தமிழியம் நமது தமிழர் நாடு சுதந்திர நடுவண்.

பொன் ரங்கன்
தமிழர் தேசியம் மலேசியா 18 / 1 / 2017