உலகில் ஓரினச்சேர்க்கையாளர்களை கொலை செய்யும் நாடு: எந்த நாடு தெரியுமா? அதிர்ச்சி தகவல்!

lesbianஉலகின் பல்வேறு நாடுகளில் ஓரினச் சேர்க்கையாளர்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றன.

இவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்தாலும், இவர்களை எதிர்ப்பு வலுக்கும் நாடுகள், இவர்களுக்கு கடுமையான சட்டங்களை பிறப்பித்து இருக்கின்றன. அதன் மூலம் ஏராளமான ஓரினச்சேர்க்கையாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர் என்பது தான் மிகப் பெரிய அதிர்ச்சி செய்தி.

ஈரான்

கடந்த 1979 ஆம் ஆண்டுகளில் இருந்து ஓரினச் சேர்க்கையாளர்கள்(ஆண்கள்) என்பதற்காக சுமார் 4000 முதல் 6000 பேர் வரை கொலை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நைஜீரியா

நைஜீரியாவில் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு என்றே கடுமையான சட்டங்கள் உள்ளதாக கூறப்படுகிறது. அதாவது அவர்களை கல்லால் அடித்துக் கொல்லும் சட்டங்கள் கூட இருக்கின்றனவாம். ஒரு சில இடங்களில் அந்த ஆண்களை பெண்கள் போல் ஆடை உடைத்தி சிறையில் அடைத்து விடுவார்கள் என்றும் கூறப்படுகிறது.

சவூதி

இந்நாட்டில் ஓரினச்சேர்க்கையாளர் என்று கண்டறியப்பட்டாலே அவர்களுக்கு 100 கசையடி கொடுப்பது உறுதியாம்.

துருக்கி

ஓரினச்சேர்க்கையாளர்கள் அஞ்சி வாழும் நாடுகளில் ஒன்றாக இது இருக்ககூடும் என கூறப்படுகிறது. இந்நாட்டில் ஓரினச்சேர்க்கையாளர்கள் தடைசெய்யப்பட்ட ஒன்று, மேலும் இங்கு 89 சதவீதம் ஒரினச்சேர்க்கையாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

டொமினிக்கா

டொமினிக்காவில் ஓரினச் சேர்க்கையாளர்கள் கண்டறியப்பட்டால் பத்து வருடங்கள் வரை சிறை தண்டனை வழங்கப்படுகிறது என்றும் சில சமயங்களில் இவர்கள் உடலுறவில் ஈடுபடுவது கண்டறியப்பட்டால் 25 வருடங்கள் வரை சிறை தண்டனை வழங்கப்படுகிறது எனவும் கூறப்படுகிறது.

ஆப்கானிஸ்தான்

கௌரவ கொலைகள் இந்நாட்டில் பொதுவானது. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் ஓரினச் சேர்க்கையாளர்கள் என அறியப்பட்டாலும் கொலை செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

-http://news.lankasri.com