வியாழக்கிழமை ரொஹின்யா விவகாரம்மீது ஓஐசியின் அவசரக் கூட்டம்

oic இஸ்லாமிய   நாடுகள்   ஒத்துழைப்பு   மன்றம்(ஓஐசி)  மியான்மாரில்   ரொஹின்ய   முஸ்லிகளின்   நிலை   குறித்து  விவாதிப்பதற்காக   அதன்  வெளியுறவு   அமைச்சர்களின்    அவசரக்  கூட்டமொன்றைக்   கோலாலும்பூரில்   நடத்துகிறது.

மலேசியாவின்   வேண்டுகோளுக்கிணங்கக்   கூட்டப்பட்டுள்ள  அக்கூட்டம்    மலேசியாவின்    தலைமையில்   நடைபெறுகிறது.   வியாழக்கிழமை   கோலாலும்பூர்    மாநாட்டு  மையத்தில்    நடைபெறும்   அக்கூட்டத்தில்   59   உறுப்பு   நாடுகளின்    வெளியுறவு   அமைச்சர்களும்   கலந்து  கொள்வார்கள்    என   எதிர்பார்க்கப்படுகிறது.

அக்கூட்டத்தில்   பிரதமர்   நஜிப்   அப்துல்   ரசாக்   முக்கிய   உரை   நிகழ்த்துவார்   என்று   தெரிகிறது.