லண்டன் மக்கள் மூன்று நாட்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது: மேயர் எச்சரிக்கை

londonலண்டன்வாசிகள் பொது சுகாதார அவசர காலநிலை காரணமாக எதிர்வரும் மூன்று நாட்கள் வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும் என லண்டன் மேயர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நகரில் அதிகரித்துள்ள நச்சு காற்று காரணமாக இந்த பொது சுகாதார எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக மேயர் குறிப்பட்டுள்ளார்.

தலைநகர் சாலையில் அதிகரித்துள்ள போக்குவரத்து காரணமாக உயர் மாசுபாடு ஏற்பட்டுள்ளது. இது எதிர்வரும் மூன்று நாட்களுக்கு இன்னும் அதிகரிக்கும் என லண்டன் காற்று மாசுபாடு கணிப்புகள் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து அனைத்து தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மக்களிடம் இந்த எச்சரிக்கை அறிவிப்பு கொண்டு சேர்க்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து சுற்றுச்சூழல் துறை கூறியதாவது, இது போன்ற உயர் மாசுபாடு காலகட்டத்தின் போது அசெளகரியம், கண் எரிச்சல், இருமல் அல்லது தொண்டை எரிச்சலால் அவதிப்பட்டு வரும் அனைவரும் வெளியே செல்வதை குறைக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

இதய பிரச்சினைகளால் அவதிப்படும் பெரியவர்கள் மற்றும் நுரையீரல் குறைபாடு உள்ள குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் குறிப்பாக வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும்.

ஆஸ்துமா உள்ள நபர்கள் அடிக்கடி தங்கள் நிவாரணி இன்ஹேலர் பயன்படுத்த வேண்டும். முதியவர்கள் உடல் உழைப்பை குறைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

-http://news.lankasri.com