பெர்சேக்கு எதிராக அரசாங்கத்தின் மேல்முறையீடு நிராகரிக்கப்பட்டது

claimகூட்டரசு   நீதிமன்றம்,    2012   பேரணியின்போது   நிகழ்ந்த    சேதங்களுக்கு    பெர்சே  அமைப்பிடமிருந்து   இழப்பீடு    பெற   அரசாங்கம்     செய்திருந்த   மேல்முறையீட்டைத்   தள்ளுபடி    செய்தது.

உச்ச   நீதிமன்றம்    அம்முறையீட்டைத்    தள்ளுபடி     செய்ததன்   மூலம்,      அமைதிச்   சட்டம்  2012-இன்கீழ்   பேரணிக்குப்  பின்பு   இழப்பீடு    கோரும்   உரிமை    அரசாங்கத்துக்கும்   போலீசுக்கும்    கிடையாது    என்று     கடந்த    ஆக்ஸ்ட்  மாதம்   முறையீட்டு   நீதிமன்றம்    அளித்திருந்த    தீர்ப்பை       நிலைநிறுத்தியது.

முறையீட்டு   நீதிமன்றத்தின்    தீர்ப்புக்கு   எதிராக   அரசாங்கம்    செய்திருந்த   மேல்முறையீட்டை    சாபா    சரவாக்    தலைமை    நீதிபதி    ரிச்சர்ட்   மலஞ்சும்    தலைமையில்    மூவரடங்கிய    நீதிபதிகள்   விசாரித்தனர்.

நீதிபதி   ஹசான்    லா,   நீதிபதி   அபு   சமா    நோர்டின்   ஆகியோர்    மற்ற  இரு   நீதிபதிகளாவர்.

முறையீட்டைத்   தள்ளுபடி    செய்த   நீதிபதிகள்  குழு   செலவுத்   தொகை    கொடுக்கும்படி   உத்தரவிடவில்லை.