DLP என்னவென்று கற்க வேண்டியது பெற்றோர்கள்தான் ..மாணவர்கள் அல்ல !

dlp-malaysia (1)இந்தியாவில் சமசீர் கல்வி இன்னும் அமுலாக்கம் செய்ய முடியவில்லை. காரணம் அரசியல். தமிழகத்தில் உள்ளது போல convent என்ற தனியார் பள்ளிகள் இந்நாட்டு சீனர்களுக்கு மட்டும் உண்டு. மலாய் ,டாடிக்காக்களை தவிர தமிழர்கள் தனியார் பள்ளிகள் இந்நாட்டில் இல்லை. சுமார் 150 தமிழ்ப்பள்ளிகளில் பாலர் பள்ளிகள் இருப்பதாக தகவல். இதில் எந்த அளவுக்கு ஆங்கிலமும் மலாய் மொழியும் போதிப்பதாக தெரியவில்லை.

ஆங்கிலத்தில் அறிவியலுக்கும் கணிதத்துக்கும் போகும் முன் ஆங்கில அறிவு இல்லாமல் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் அழுத்தம் தந்து தமிழ்ப்பள்ளிகளின் கற்றல் கற்பித்தல் பாரம்பரிய தமிழ்ப்பள்ளி ஆதாரத்தை இடையில் உடைத்து  அழிக்க நினைப்பது
வேற்று இன மொழி வெறியர்களின் அரசியல் ஆர்ப்பரிப்பு என்பதுதான் உண்மை.

அம்மனோ கூட்டத்தில் தன் இனம் தன் மொழி தன் சமயம் செம்பியனாக காட்டிக்கொள்ளும் அரசியல் வாதிகள் அகண்ட உலக அறிவார்த்த சிந்தனைக்கு வருவதில்லை.

மொழி சிக்கலால் இன்றும் மூன்றாம் தர நாடு நிலையிலையிலிருந்து விடுபட முடியாத 2020 திட்டம் தொக்கிய நிலையில்  புதிய தேசிய TN 50 கு தாவி இன்னும் 30  ஆண்டுகள் அடிப்படை நிலையான கல்விக்கு போராடும் நிலையில் பாட போதனைகளால் போராடுகிறோம்.

2013 – 2025 புதிய கல்வி கொள்கையில் DLP இல்லை. இடையில் திட்டமாக கொண்டுவர யார் காரணம் ஏன் என்ற வினாவுக்கு இதுவரை பதில் இல்லை.

DLP திட்டத்தில் இணைந்திருக்கும் நாட்டின் தமிழ்ப்பாளிகளுக்கு ஒன்றுக்குக்கூட DLP திட்டத்தில் இடம்பெறவில்லை அதுபோக பெற்றோர்கள்தான் தம மாணவர்களின் கல்வி திறனுக்கு முழு பொறுப்பு என்ற பக்க வாட்ட குத்தலும் குடைச்சல் அறிவிப்பும் நம்மை மேலும் கொந்தளிக்க வைக்கிறது.

300 SK பள்ளிகளில் DLP திட்டமும் எதிர்ப்புக்கு ஆளாகி உள்ளதும் இந்த MOE , PADU அதை கவனிக்கும் pemandu எல்லாம் பொறுப்பை பெற்றோர்களிடம் விட்டுவிட்டு காக்க சுடப்போவது ஏன் ?

நம்மக்கு தெரிந்த ஆய்வுப்படி தமிழ் மொழி தெரியாத தமிழ்ப்பள்ளிக்கு போகாத பெற்றோர்கள்தான் இந்த DLP யை முழுமையாக அறியாமல்
தலைமை ஆசிரியர் சொன்னார் பெ ஆ சங்க தலைவர் சொன்னார் என்று மரியாதை நிமித்தம் தம பிள்ளைகளை முட்டாளாக்க முனைகின்றனர்.

அவன் சொன்னான் இவன் சொன்னான் என்ற சுய புத்திக்கு வராமல் தமிழ் கலை கலாச்சாரம் பண்பாடு மட்டும் வேண்டும் தமிழுணர்வு வாடகைக்கு போதும் என்பது பக்கத்துக்கு வீட்டு வெள்ளைக்காரனிடம் வட சுடச்சொல்லி பின்னால் வீட்டு மலாய்க்காரனை சாப்பிடச்சொல்லி மரத்தில் காக்க கா என்று  நரிக்கு போட்ட நிலைதான் இந்த DLP ஆசாமிகள் போடும் பூஜை.

மாலேசியாவில் 200 ஆண்டுகள் தமிழ்ப்பள்ளி கல்வி என்ற அடையாளத்தை நிலைநிறுத்துவது ஒவ்வொரு தமிழனின் கடமை.
தமிழன் அடையாளம் வேண்டாம் என்கிற இந்தியன் SK பள்ளிக்கு அனுப்புங்கள் அங்கு தமிழ்ப்பாடத்தை பள்ளி நேரத்தில் படிக்கவாவது
போராடுங்கள்.

ஒன்றுக்கும் உதவாத DLP ஆதரவு செவிட்டு இனங்கள் வீட்டின் சுயம்வரமாவது சொத்தையாகாமல் பாதுகாக்க முடியுமா என்று பாருங்கள்.காரணம் அங்கும் டாடி என்றும் மாமி என்ற பிணங்களும் உலவுவதாக அறிகிறோம்.

கடைசியாக DLP பாடங்களை குடும்ப மேம்பாட்டு அமைச்சு பெற்றோர்களுக்கு படித்துக்கொடுத்து சரி என்று விளங்கினால் தன் பிள்ளைகளை தயார்செய்து கலப்படம் பார்க்க அழையுங்கள்.

குழந்தைகளின் தாய் ம்மொழி வழி கற்றல் கற்ப்பித்தல் கவனித்தால் ஆற்றலை வளர்த்து முறைப்படுத்தி மாணவனின் இடைநிலை காலத்தில் சுதந்திரமாக முடிவெடுக்க விடுங்கள் ஆனால் தமிழர் இனம் தமிழ் மொழி உரிமையை காத்து நிற்பது உங்கள் கடமை என்பதை இந்த சமுதாயமே உணர வேண்டும். உணர்த்துவதுதான் எங்கள் போராட்டம்.

நன்றி / வாழக தமிழ் வளர்க தமிழர் இனம்.
நன்றி,

பொன் ரங்கன்
தமிழர் தேசியம் மலேசியா,