மக்கள் போராட்டம் வென்றது! காணிகளை விடுவிக்க ஜனாதிபதி நடவடிக்கை!

koppapulavu1எமது காணிகளுக்குள், செல்ல அனுமதிக்கப்பட்ட பின்னரே நாங்கள் போராட்டத்தைகைவிடுவோம் என தற்போது தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாப்பிலவு மக்கள்முல்லைத்தீவு மாவட்டச் செயலர் ரூபவதி கேதீஸ்வரனிடம் செவ்வாய்க்கிழமை (14)தெரிவித்துள்ளனர்.

கொழும்பில், ஜனாதிபதி, பாதுகாப்பு பிரிவினர், மீள்குடியேற்ற அமைச்சின்அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலையடுத்து நிலங்களை விடுவிக்க துரிதநடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி உறுதியளித்துள்ளார் எனவும், போராட்டத்தைகைவிடுமாறும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாப்பிலவு மக்களைச்சந்தித்த மாவட்டச் செயலர் தெரிவித்துள்ளார்.

எனினும், காணிகளுக்குள் எம்மை செல்ல அனுமதித்ததன் பின்னரே நாம் போராட்டத்தைகைவிடுவோம். அதுவரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என அம்மக்கள் மாவட்டச்செயலரிடம் தெரிவித்துள்ளனர்.

இப்பகுதியில் 54 குடும்பங்களுக்குச் சொந்தமான 42 ஏக்கர் காணி வான்படையினரின்முகாமுக்குள் உள்ளடங்கியுள்ளது.

42 ஏக்கர் காணியில் 25 ஏக்கர் காணியைவிடுவிக்க கொழும்பில், ஜனாதிபதி, பாதுகாப்பு பிரிவினர், மீள்குடியேற்றஅமைச்சின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் வான்படையினர்சம்மதித்துள்ளனர்.

எனினும் உறுதிமொழியையடுத்து போராட்டத்தை கைவிட மாட்டோம்எனவும், காணிகளை விடுவித்தால் மாத்திரமே போராட்டத்தை கைவிடுவோம் என மக்கள்தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

-http://www.tamilwin.com

TAGS: