கிம் கொலை தொடர்பில் கைதான இருவருக்கு 7நாள் தடுப்புக் காவல்

kimவடகொரிய அதிபரின்  ஒன்றுவிட்ட    சகோதரர்    என்று   நம்பப்படும்   கிம் ஜொங் நாம்    படுகொலை   தொடர்பில்    கைதான    இரு  பெண்களும்   விசாரணைக்காக   ஏழு   நாள்களுக்குத்   தடுத்து  வைக்கப்பட்ட்டனர்.

சந்தேகத்துக்குரிய    இரண்டாவது  பெண்   இன்று    அதிகாலை   மணி   2க்குக்  கைது    செய்யப்பட்டதாக     இன்ஸ்பெக்டர்- ஜெனரல்   அப்  போலீஸ்    காலிட்   அபு   பக்கார்    கூறினார்.

அவர்  இந்தோனேசிய   கடப்பிதழை  வைத்திருந்தார்.   அது    அவர்    இந்தோனேசியாவின்  செராங்கில்   பிறந்தார்    எனக்  குறிப்பிடுகிறது.

“விமான    நிலைய   சிசிடிவி  காணொளியிலிருந்து    அவர்தான்   என்பது   அடையாளம்   காணப்பட்டது.  கைதானபோது   அவர்  தனியாகத்தான்    இருந்தார்”  என  காலிட்   ஓர்    அறிக்கையில்   கூறினார்.

சேனல்   நியுஸ்   ஆசியா,  மூத்த   போலீஸ்   அதிகாரி   ஒருவரை  மேற்கோள்காட்டி,   அப்பெண்ணின்   நண்பரான  மலேசிய   ஆடவர்    ஒருவரும்    கொலை   தொடர்பில்   பிடிபட்டிருப்பதாகக்  கூறிற்று.

இதனிடையே,  இந்தோனேசிய   தூதரகம் ,  இந்தோனேசிய    கடப்பிதழை  வைத்துள்ள   சந்தேகத்துக்குரிய   இரண்டாவது  பெண்ணின்  அடையாளத்தை   உறுதிப்படுத்திக்   கொள்ள  முயன்று    வருகிறது.

அவர்  கைதாகித்   தடுத்து  வைக்கப்பட்டதை    அடுத்து   அவரைப்  பற்றிய   தகவல்களைக்  கண்டறியுமாறு    அதிகாரிகள்   பணிக்கப்பட்டிருப்பதாக    இடைக்கால  தூதர்  அண்ட்ரியானோ  இர்வின்   கூறினார்.

“கடப்பிதழ்  போலியாகக்கூட   இருக்கலாம்.

“மலேசிய  அதிகாரிகளிடமிருந்து   அதிகாரப்பூர்வமான   தகவல்   எதுவும்  வரவில்லை.  நாங்களாகத்தான்   உறுதிப்படுத்திக்  கொள்ளும்  முயற்சியில்   இறங்கியுள்ளோம்”,  என்றாரவர்.