தமிழகத்தின் முதல்வராகிறார் எடப்பாடி பழனிச்சாமி: இன்று மாலை பதவியேற்பு….பன்னீர் செல்வத்தின் நிலை என்ன?

edappadiதமிழகத்தில் ஆட்சியமைக்க அதிமுக சட்டமன்ற தலைவரான எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் அழைப்பு விடுத்துள்ளார்.

இன்று மாலை 4 மணிக்கு பதவியேற்பார் எனகூறப்படுகிறது. ஆளுநரின் இந்த உத்தரவால் பன்னீர் செல்வம் தரப்பினர் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பன்னீர் செல்வத்துக்கு 10 எம்எல்ஏக்களின் ஆதரவு இருந்த நிலையில், ஆளுநரின் இந்த அதிரடி உத்தரவால் பன்னீர் செல்வத்தின் நிலை என்ன என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

முதல் இணைப்பு: எடப்பாடி பழனிச்சாமி- ஆளுநர் சந்திப்பு

தமிழகத்தின் முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலை பதவியேற்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்விக்கான பதில் கிடைக்கும் தருவாய் தற்போது உருவாகியுள்ளது.

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு தண்டனை என்ற செய்தி வந்தவுடனே கூவத்தூரில் அவர் முன்னிலையில் அதிமுகவின் எம்.எல்.ஏக்களால் சட்டசபை குழுத்தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தெரிவு செய்யப்பட்டார்.

இதன் பின்னர் இருமுறை ஆட்சி அமைப்பது தொடர்பாக தமிழக ஆளுநரை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி இன்றும் ஆளுநரை சந்திக்க மூன்றாவது முறையாக தற்போது ஆளுநர் மாளிக்கைக்கு சென்றுள்ளார்.

இந்த சந்திப்பு முடிந்த பின்னர் செய்தியாளர்களை எடப்பாடி பழனிச்சாமி சந்திப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ஆளுநர் ஆட்சி அமைக்க கூறிவிட்டால் இன்று மாலையே தமிழகத்தின் முதல்வராக அவர் பதவியேற்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தகவல் வெளியானதையடுத்து கூவத்தூரில் எம்எல்ஏ-க்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையே காங்கிரஸ் எந்தவொரு தரப்புக்கும் ஆதரவு அளிக்காது என இளங்கோவன் அறிவித்துள்ளார்.

-http://www.tamilwin.com

TAGS: