பிஎன் அழைப்பு: டிஏபி நால்வர் நிராகரிப்பு

dapகடந்த   ஞாயிற்றுக்கிழமை   டிஏபி-இலிருந்து    வெளியேறிய   நான்கு  பிரதிநிதிகளும்    அவர்களின்   முன்னாள்   கட்சி   குறித்துப்  பேச   பாரிசான்  நேசனல்  விடுத்த    அழைப்பைப்  புறந்தள்ளினர்.

கோத்தா   மலாக்கா    எம்பி    சிம்  தோங்  ஹிம்,   தம்மையும்   கட்சியிலிருந்து   விலகிய     ஏனைய   மூன்று    சட்டமன்ற    உறுப்பினர்களையும்   பிஎன்  கருத்தரங்கமொன்றில்   பேசுவதற்கு       மலாக்கா  முதல்வர்   இட்ரிஸ்  ஹருன்   அழைத்தார்   என்றார்.

“டிஏபி-இன்  குறைகளை   எடுத்துரைக்க    முதலமைச்சர்   அழைத்தார்.  நாங்கள்  ‘முடியாது’   என்று   கூறி  விட்டோம்.

“நினைத்தால்  சிரிப்புத்தான்   வருகிறது.  நாங்கள்  பிஎன்னை  அதுவும்   அம்னோவை   என்றும்   ஆதரித்ததில்லை.  அதை   ஏற்கனவே  வலியுறுத்தியுள்ளோம்”,  என்றவர்   மலேசியாகினியிடம்   தெரிவித்தார்.

இட்ரிஸ்  நிலைமையைச்  சாதகமாக்கிக்  கொள்ளப்    பார்க்கிறார்   என்று  அவர்  சொன்னார்.

இட்ரிஸ்,   இப்போது   சுயேச்சை   பிரதிநிதிகளான     அந்நால்வரையும்   பிஎன்னில்  சேர   அழைப்பு  விடுத்ததாகவும்     கூறப்படுகிறது.