ஜோங்-நாம் உடலை ஒப்படைப்பதில் தாமதம்: வட கொரியா குற்றச்சாட்டை ஐஜிபி மறுக்கிறார்

igpஜோங்- நாம்   உடலை     ஒப்படைக்காமல்      மலேசியா   வேண்டுமென்றே  தாமதப்படுத்தி   வருவதாக   வட  கொரியா   சுமத்திய    குற்றச்சாட்டை   இன்ஸ்பெக்டர்- ஜெனரல்    அப்   போலீஸ்    காலிட்   அபு   பக்கார்    மறுத்துள்ளார்.

ஜோங்-நாம்   குடும்பத்தின்    மரபணு  கிடைக்காதவரை  விசாரணையை   முடித்துக்  கொள்ள  இயலாது  என்றாரவர்.

வட   கொரியா    மலேசிய   சட்டங்களை   மதிக்க   வேண்டும்   என்று   வலியுறுத்திய    காலிட்,   போலீசாரின்   நடவடிக்கையில்     அதற்கு   உடன்பாடு   இல்லையென்றால்   அதன்   வழக்குரைஞர்களிடம்   ஆலோசனை   நாடலாம்    என்றார்.

“அவர்களின்   வழக்குரைஞர்கள்   அவர்களுக்குத்   தக்க    ஆலோசனை   வழங்குவார்கள்.  மலேசியாவில்   சட்ட   ஒழுங்குமுறைகள்   உண்டு.  அனைவரும்   அதன்படிதான்   நடந்து   கொள்ள    வேண்டும்……வட  கொரியா  உள்பட”,  என  பெர்னாவிடம்   காலிட்   தெரிவித்தார்.

வட  கொரியத்    தலைவர்   கிம்   ஜோங்-உன்னின்   ஒன்றுவிட்ட    சகோதரரான   ஜோங்-நாமின்  உடலைத்   தங்களிடம்   ஒப்படைப்பதை    மலேசியா   வேண்டுமென்றே    தாமதப்படுத்தி   வருவதாக   நேற்று   மலேசியாவுக்கான    வட  கொரியா  தூதர்    காங்   சோல்   குற்றஞ்சாட்டி  இருப்பது  குறித்து    காலிட்  கருத்துரைத்தார்.