விபத்தை தடுக்க பிரான்ஸ் பொலிசாரின் திட்டம்- இனி கவனம் மக்களே

france_traces_001பிரான்சில் அதிவேகமாக வாகனம் ஓட்டுபவர்களை கண்காணிக்க புதிய யுக்தியை கையாள அரசு முடிவு செய்துள்ளது.

அதிவேகமாக வாகனங்கள் ஓட்டுவதால் அதிகளவு விபத்துக்கள் நடக்கிறது, இதனை தடுக்க பிரான்ஸ் பொலிஸ் தனியார் நிறுவனங்களுடன் கை கோர்த்து ஒரு விடயத்தை மேற்கொள்ளவுள்ளது.

அதன்ப்படி, கார் வேகங்களை அளவிட 383 கார்களில் பொருத்தப்பட்ட கமெராக்களை வைத்து நாடு முழுவதும் ரோந்து செல்வதின் மூலம் வருடத்துக்கு 1.5 மில்லியன் கார்களை கண்காணித்து வருகிறது.

இந்த 383 என்பது அடுத்த வருடத்தில் 450 ஆக உயர உள்ளது.

இதை செய்ய ஆட்கள் பற்றாகுறையாக உள்ளதால் தனியார் நிறுவனங்களை பொலிசார் நாடியுள்ளனர். அவர்களும் இனி இந்த கண்காணிப்பு பணியில் ஈடுப்படுவார்கள் என தெரிகிறது.

வேகமாக செல்லக்கூடாது என கூறப்பட்டுள்ள பகுதியில் ஒரு மணி நேரத்திற்கு 10 கி.மீட்டர் வேகத்தை தாண்டினால் அவர்கள் பொலிசாரிடம் சிக்குவார்கள்.

அதே போல போக்குவரத்து துறை சொன்ன வேகத்தை தான் எல்லா இடங்களிலும் கடைப்பிடிக்க வேண்டும்.

கடந்த 2016ல் மட்டும் பிரான்ஸில் சாலை விபத்தில் 3469 பேர் உயிரிழந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

-http://news.lankasri.com