மீண்டும் ஜல்லிக்கட்டுக்கு ஆப்பு? பீட்டா வசம் ஆதாரங்கள்: அதிர்ச்சியில் தமிழர்கள்

jallikattuதமிழகத்தில் இந்தாண்டு நடந்த ஜல்லிக்கட்டில், காளைகள் துன்புறுத்தப்பட்டுள்ளதாகவும் அதற்கான ஆதரங்களை திரட்டி வருவதாகவும் பீட்டா அமைப்பு தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு தமிழகத்தில் நடத்துவதற்கு உச்சநீதிமன்றம் தடைவிதித்திருந்தது. தமிழகத்தில் ஜல்லிக்கட்டு தடைசெய்யப்படுவதற்கு முக்கிய காரணம் பீட்டா அமைப்பு என்று கூறப்பட்டது.

அதன் பின் இந்தாண்டு கண்டிப்பாக தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று இளைஞர்கள் உட்பட பலரும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடத்தினர்.

அதன் பயனாக இந்தாண்டு குடியரசுத் தலைவர் ஒப்புதலுடன் அப்போது முதல்வராக இருந்த பன்னீர்செல்வம் தமிழக சட்டசபையில் அவசர சட்டம் இயற்றினார். பின்னர் அந்த அவசரச் சட்டம் சட்டமாக்கப்பட்டது. அதன் பின் தமிழகத்தின் முக்கிய இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டது.

இந்நிலையில் பீட்டா அமைப்பின் இந்திய தலைவரான பூர்வா ஜோஷிபுரா மீண்டும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அவர் கூறுகையில், இந்தாண்டு நடந்த ஜல்லிக்கட்டின் போது காளைகள் துன்புறுத்தப்பட்டு மிருகவதை நடந்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.

இதற்கான ஆதாரங்களை அவர் சேகரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். பூர்வா ஜோஷிபுராவின் பேச்சு மீண்டும் ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் மற்றும் தமிழர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று கூறப்படுகிறது.

-http://news.lankasri.com

TAGS: