ஐஜிபி: பாலமுருகன் மரணம் குறித்து போலீஸ் அதிகாரி விசாரிக்கப்படுகிறார்

 

JusticeforBala1போலீஸ் லாக்கப்பில் இறந்த பாலமுருகனை விடுவிக்கும்படி மஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதி விடுத்த உத்தரவைப் புறக்கணித்து விட்ட போலீஸ் அதிகாரி விசாரிக்கப்படுகிறார்.

சம்பந்தப்பட்ட அந்த அதிகாரி தண்டனைச் சட்டத் தொகுப்பு பகுதி 345 இன் கீழ் விசாரிக்கப்படுவதாக போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பாக்கார் இன்று புக்கிட் அமானில் நடந்த ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

பகுதி 345 விடுவிக்க உத்தரவிடப்பட்ட ஒருவர் சட்டத்திற்கு முரணாக தடுத்து வைக்கப்பட்டது குறித்து விசாரணை மேற்கொள்ளப்படுவதைக் குறிக்கிறது.

பாலமுருகனை விடுவிக்கும்படியும் அவரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும்படியும் நீதிபதி உத்தரவிட்டதை அவரின் வழக்குரைஞர் ஜெராட் லாஸாரஸ் உறுதிப்படுத்தியதாக கூறப்படுகிறது.

பாலமுருகனின் மீது இரண்டாவது பிரதேதப் பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்களிடமும் வாக்குமூலம் பதிவு செய்யப்படும் என்று ஐஜிபி கூறினார்.

பாலமுருகனின் மரணத்தை கொலை என்று வகைப்படுத்தும்படியும் அதன் மீதான விசாரணையைத் துரிதப்படுத்தும்படி கேட்டுக்கொண்ட வழக்குரைஞர்கள் அந்த விசாரணை சுயேட்சையானதாக இருக்க வேண்டும் என்றனர்.