‘அரசாங்கம் முழு விவரங்களைப் பெற முயல்வதில்லையே, பிறகு எப்படி 1எம்டிபிமீது குற்றம் சாட்டுவது?’

puaமுழு   விவரமும்     தெரியாமல்     1எம்டிபிமீது      நடவடிக்கை    எடுக்க    இயலாது      என்று   கூறியுள்ள   இரண்டாம்   நிதி  அமைச்சர்   ஜொஹாரி  அப்துல்    கனியைச்   சாடிய       பெட்டாலிங்  ஜெயா   உத்தாரா  எம்பி  டோனி   புவா,    அரசாங்கம்தான்   முழு   விவரம்    அறிய    எந்த  முயற்சியும்   செய்வதில்லையே    என்பதைச்   சுட்டிக்காட்டினார்.

“எவர்மீதும்   குற்றம்  சாட்டுமுன்   முழுக்  கதையும்   தெரிவது    அவசியம்தான். அதேவேளை   குற்றச்  செயலைப்  புலனாய்வு    செய்வதில்   ஒருமித்த   முயற்சியும்   தேவை.

“மலேசியாவில்   இன்றைய    நிலையில்    அது   இல்லை. மலேசியாவில்   நிகழ்ந்துள்ள   குற்றச்  செயல்களைப்  புலனாய்வு   செய்யும்  முயற்சி  அறவே   இல்லை   என்பது   அனைவரும்   அறிந்ததே”,  என்றவர்   ஓர்    அறிக்கையில்   கூறினார்.

நேற்று,  ஜொஹாரி     என்ன   தவறு   நடந்தது    என்பதை  பிஏசி(பொதுக் கணக்குக்  குழு),  ஏஜி (தலைமைக்  கணக்காய்வாளர்)   ஆகியோரால்கூட   துல்லியமாகக்  குறிப்பிட   இயலவில்லை   என்று  கூறியிருந்ததாக    த  எட்ஜ்  நிதியியல்   ஏடு   அறிவித்திருந்தது   குறித்து  புவா   இவ்வாறு  கருத்துரைத்தார்.

SHARE THIS STORY :    

RELATED POSTS

No related posts found!

   

உங்கள் கருத்துகளை பதிவுசெய்யுங்கள் (Share Your Comments)

விதிமுறைகள்: கருத்து ஆபாசமானதாக, அருவருக்கத்தக்கதாக, பிறரை அல்லது பிறரது சமயத்தை, சமூகத்தை இழிவுபடுத்துவதாக இருக்கக்கூடாது. அவ்வாறான கருத்துகள் அனுமதிக்கப்படாது. கருத்து சுருக்கமாகவும் பொறுப்புடனும் தெரிவிக்கப்பட வேண்டும். நீங்கள் பதிவு செய்யும் கருத்துக்கு நீங்களே முழு பொறுப்பாளி.

  • சிற்றெறும்பு wrote on 18 March, 2017, 18:33

    எரியும் கொள்ளியை எடுத்து முதுகு சொரிவார்களா என்ன???? முழுப்பூசணிக்காயையும் சோற்றில் மறைப்பதில் வல்லவர்களாயிற்றே!!!!

  • en thaai thamizh wrote on 19 March, 2017, 9:46

    குற்றவாளியிடம் இருந்து உண்மை வருமா?

கருத்துகளை தமிழில் தட்டச்சு செய்ய முடியும். உதாரணம் : "amma" என்று டைப் செய்து SPACEBAR-ஐ அழுத்தினால் "அம்மா" என்று தோன்றும் (Press Ctrl+g to toggle between English and Tamil)