ஹராபான், பெர்சத்துவை உறுப்புக் கட்சியாக ஏற்றது; கூட்டணியைப் பதிவுசெய்யவும் இணக்கம்

harapanபக்கத்தான்   ஹராபான்    தலைவர்    மன்றம்,   பார்டி   பிரிபூமி   பெர்சத்து   மலேசியாவை (பெர்சத்து)   எதிரணிக்   கூட்டணியின்   உறுப்புக்   கட்சிகளில்   ஒன்றாக        ஒருமனதாய்   ஏற்றுக்  கொண்டதுடன்   டாக்டர்   மகாதிர்   அறிவித்திருந்த    நான்கு    பரிந்துரைகளை   விவாதிக்கவும்   ஒப்புக்கொண்டது.

“இம்முடிவை    பிபிபிஎம்(பெர்சத்து)-  முக்குத்    தெரிவிக்க  பக்கத்தான்   ஹராபான்   செயலகம்     விரைவில்  கடிதம்   அனுப்பும்”,  என   பிகேஆர்    தலைவர்    டாக்டர்   வான்   அசிசா   வான்  இஸ்மாயில்,   பார்டி   அமனா       நெகரா  (அமனா)   தலைவர்    முகம்மட்  சாபு,  டிஏபி   தலைமைச்    செயலாளர்    லிம்   குவான்   எங்    ஆகியோர்  விடுத்த    கூட்டறிக்கை    கூறியது.

இன்று  காலை     கூடிய    ஹராபான்   தலைவர்     மன்றம்,   பக்கத்தான்   ஹராபானைச்   சங்கப்   பதிவகத்தில்    பதிவு    செய்வதென்றும்   ஒப்புக்கொண்டது.

இதற்குமுன்   பெர்சத்து   அவைத்    தலைவரான   மகாதிர்,    ஹராபான்   அதன்   பெயரை   மாற்றுவதும்   ஒரு  பொதுவான     லோகோவையும்  அடையாளச்   சின்னத்தையும்  தேர்தல்  கொள்கை    அறிக்கையையும்   உருவாக்குவதும்   அவசியம்    என்பதை    வலியுறுத்தினார்.