நஸ்ரி: இது பேராக் நதி; மகாதிர்: அதுதான் எனக்குத் தெரியுமே!

 

VillagefolksMபெரிதும் பேசப்பட்ட நஸ்ரி-மகாதிர் விவாதம் திட்டமிட்டப்படி நடைபெறவில்லை. இருப்பினும், அவ்விருவரும் கோலக்கங்சாரில் சந்தித்தனர். சென்டோல் குடித்தனர்.

நேற்றிரவு பெர்சத்து ஏற்பாடு செய்திருந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மகாதிர் என்ன நடந்தது என்பதை ஏளனத் தொனியுடன் விவரித்தார்.

நஸ்ரி விவாதம் வேண்டும் என்கிறார். “ஆனால் அவரது கட்சி அவரை ஆதரிக்கவில்லை, அவரது அரசாங்கம் அவரை ஆதரிக்கவில்லை, எவரும் அவரை ஆதரிக்கவில்லை, ஆக, அவர் என்னோடு விவாதம் செய்ய முடியாது.

“ஆனால், பரவாயில்லை. நாங்கள் அந்த விவாதத்தை ஷா அலாமில் ஏப்ரல் 7 வைத்துக்கொள்வோம்”, என்றார் மகாதிர்.

நேற்று அவர்களுக்கிடையில் நடந்த சந்திப்பு பற்றி குறிப்பிட்ட மகாதிர், “அவர் என்னைச் சந்திப்பதில் உறுதியாக இருந்தார். ஆனால், நாங்கள் சென்டோல் விற்கும் இடத்தில் சந்தித்த போது அவர் ஒன்றும் சொல்லவில்லை. சந்தித்து ஒன்றும் பேசாமல் இருப்பதில் என்ன பயன்?, என்று அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களின் பலத்த சிரிப்பு ஒலிக்கிடையே மகாதிர் கேட்டார்.

இந்த நேரத்தில் மகாதிரின் ஒலிபெருக்கி முடங்கிவிட்டது. அது சரி செய்யப்பட்ட பின்னர் பேச்சைத் தொடர்ந்த மகாதிர், “இந்த ஒலிபெருக்கி நஸ்ரி மாதிரிதான், அது தன் குரலை இழந்து விட்டது”, என்றாரவர்.

பாடாங் ரெங்காஸுக்கு ஏன் வந்தார் என்பதை விளக்கிய மகாதிர், “ஒரு மத்திய அமைச்சரின் தொகுதி எப்படி இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள விரும்பினேன்.

“ஆனால், அது அப்படி இருப்பதாகத் தெரியவில்லை. வீடுகள் இங்கும் அங்கும் உடைந்து கிடக்கின்றன.

“ஒருவேளை, (அரசாங்கத்தின்) கவனம் மற்ற இடங்களில் இருக்கலாம், (ஆனால்) நீங்கள் உங்களுடைய இடத்தைக் கவனித்துக்கொள்ள முடியவில்லை என்றால், நீங்கள் (நஸ்ரி) எப்படி நாட்டை கவனித்துக்கொள்ளப் போகிறீர்கள்?, என்று மகாதிர் கேட்டார்.

“தரமற்ற தலைவர்கள்”

தமது பேச்சின் கடைசிக் கட்டத்தில், நஸ்ரியுடனான சந்திப்பை பற்றி குறிப்பிட்ட மகாதிர், அவர் அமைச்சரவையிலிருந்து விலகிக்கொள்ளப்nazri போவதாக தம்மிடம் சொல்ல விரும்பியிருக்கலாம் என்றார்.

“ஆனால், அவர் மௌனமாக இருந்தார். எனக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்தார். அவர் முணுமுணுத்திருந்தால்கூட, அதை நான் கேட்டிருப்பேன். ஆனால் அவர் ஒன்றும் சொல்லவில்லை.

“அவர் அங்கு உட்கார்ந்து கொண்டு முன்புறத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார். அவர் என் முகத்தைப் பார்க்கவே இல்லை.

“அதிகபட்சமாக ‘அது பேராக் நதி’ என்றார் – ஆனால் அது எனக்கு முன்னமே தெரியும், அதை அவர் எனக்குச் சொல்ல வேன்டியதில்லை”, என்று மகாதிர் மீண்டும் அதிகமான சிரிப்பு ஒலிகளுக்கிடையில் கூறினார்.

இதுதான் “இன்றையத் தலைவர்களின் தரம்” என்று வருத்தப்பட்டுக் கொண்ட மகாதிர், அந்த வரிசையில் அஹமட் மாஸ்லான் மற்றும் ஷாரிர் சாமாட் போன்ற இதர அம்னோ தலைவர்களையும் சேர்த்துக் கொண்டார்.