40 பொலிஸ் அதிகாரிகளின் தலைகளை வெட்டி கொலை: எந்த நாட்டில் தெரியுமா?

Congo-flagஆப்பிரிக்காவில் போராட்டக் குழுவினர் சிலர் அரசாங்கத்தை சேர்ந்த 40 பொலிஸ் அதிகாரிகளை சிறை பிடித்து அவர்களின் தலைகளை வெட்டி கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான காங்கோ ஜனநாயக குடியரசு நாட்டில் தான் இந்த கொடூரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இந்த நாட்டில் உள்ள Kasai மாகாணத்தில் Kamwina Nsapu என்ற அரசாங்கத்திற்கு எதிரான போராட்டாக்குழு ஒன்று இயங்கி வருகிறது.

இந்தக் குழுவிற்கு Jean-Pierre Pandi என்பவர் தலைவராக பதவி வகித்து வந்துள்ளார். மேலும், இந்த மாகாணத்தை தனது முழுக் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து அரசாங்கத்தை வெளியேற்ற அவர் பல சதி திட்டங்களில் ஈடுப்பட்டு வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் அரசாங்கத்தை சேர்ந்த அதிரடி படையினர் நடத்திய தாக்குதலில் போராட்டக் குழுவின் தலைவர் கொல்லப்பட்டார்.

இச்சம்பவம் போராட்டக்காரர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அரசாங்கத்திற்கு எதிராக பல்வேறு தாக்குதல்களை நடத்தி இதுவரை 400 பேர் வரை கொன்றுள்ளனர்.

இதுபோன்ற ஒரு சூழலில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று அரசாங்கத்தை சேர்ந்த பொலிஸ் அதிகாரிகள் சில வாகனங்களில் பயணம் செய்தபோது அவர்களை போராட்டக்குழுவினர் கூண்டோடு சுற்றி வளைத்து சிறைப்பிடித்துள்ளனர்.

இவர்களில் 6 பொலிஸ் அதிகாரிகளை மட்டும் விடுதலை செய்த போராட்டக்காரர்கள் எஞ்சிய 40 பொலிஸ் அதிகாரிகளி தலைகளை வெட்டி கொலை செய்துள்ளனர்.

போராட்டக்குழுவினரின் இந்த காட்டுமிராண்டித்தனத்திற்கு காங்கோ அரசாங்கமும், ஐ.நா சபையும் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

-http://news.lankasri.com