நாயின் வாயை கட்டிய உரிமையாளர்: 5 ஆண்டுகள் சிறை விதித்த நீதிமன்றம்

doggஅமெரிக்காவில் வளர்ப்பு நாயின் வாயை கட்டிய உரிமையாளருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாகாணத்தில் உள்ள North Charleston நகரில் William Dodson(43) என்ற நபர் வசித்து வந்துள்ளார்.

இவரது வீட்டில் வளர்ப்பு நாய் ஒன்றும் வளர்ந்து வந்துள்ளது.

இந்நிலையில், கடந்த 2015-ம் ஆண்டு நாய் அடிக்கடி குரைத்து தொந்தரவு கொடுத்ததால் உரிமையாளர் ஒரு கொடூரமான செயலில் ஈடுப்பட்டுள்ளார்.

நாயின் வாயை நன்றாக பிளாஸ்டிக் டேப்பை வைத்து இருக்கமாக கட்டியுள்ளார்.

இது போன்று ஒவ்வொரு நாளும் 9 முறை செய்து வந்துள்ளார். இதனால் நாயின் வாய்ப்பகுதியில் அழுத்தமான காயங்களும் ஏற்பட்டன.

மேலும், தலைக்கு ரத்த ஓட்டம் செல்லாமல் நாய் பெரும் அவதியுற்று வந்துள்ளது.

இந்நிலையில், உரிமையாளரின் சித்ரவதையை தாங்கம் முடியாத நாய் அங்கிருந்து தப்பியுள்ளது. மேலும், இந்த நாய் மீட்புக்குழுவினரால் திரும்ப கண்டுபிடிக்கப்பட்டபோது உரிமையாளரின் கொடுமைகள் அனைத்தும் வெளியானது.

இது அமெரிக்கா மட்டுமின்றி உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. நாயிற்கு தொடர்ந்து 36 மணி நேரங்கள் சிகிச்சை அளித்தப் பின்னரே அது இயல்பு நிலைக்கு திரும்பியது.

வளர்ப்பு நாயை கொடூரமாக சித்ரவதை செய்த உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்துள்ளது.

இவ்வழக்கின் இறுதி வாதம் கடந்த வெள்ளிக்கிழமை அன்று வந்தபோது விலங்குகளை வதைப்பு தடுப்புச்சட்டத்தின் கீழ் உரிமையாளருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பதாக நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

-http://news.lankasri.com