அபு சாயாப் கும்பலால் கடத்தப்பட்ட ஐவர் மீட்பு; இருவர் நாடு திரும்பினர்

abu sayafகடந்த   ஆண்டு   லாஹாட்  டத்துவுக்கு  அப்பால்    உள்ள  கடலில்   அபு   சயாப்   பயங்கரவாதிகளால்   கடத்திச்    செல்லப்பட்ட   மேலும்   மூன்று   மலேசியர்கள்   பிலிப்பினோ   படைவீரர்களால்   மீட்கப்பட்டிருப்பதைக்    கிழக்கு   சாபா   பாதுகாப்புத்   தளபத்யம்(எஸ்கோம்)   உறுதிப்படுத்தியுள்ளது.

ஃபாண்டி   பக்ரான்,27,  முகம்மட்  ஜமாடில்  ரகிம்,  24,  முகம்மட்  ரிட்சுவான்  இஸ்மாயில், 33,  ஆகிய   மூவரும்   நேற்றிரவு   மீட்கப்பட்டதாக   எஸ்கோம் டிசிபி தளபதி  வான்   அப்ட்   பாரி    வான்   அப்ட்  காலிட்   கூறினார்.

“இப்போதைக்கு   அவ்வளவுதான்   சொல்ல   முடியும்.  அவர்கள்   மீட்கப்பட்டிருக்கிறார்கள்”,  என்றவர்  பெர்னாமாவிடம்    தெரிவித்தார்.

அவர்கள்,  ஜூலை   18-இல்,      செருடோங்   தீகா   என்ற   இழுவைப்  படகிலிருந்து    அபு  சயாப்  கும்பலால்    கடத்திச்  செல்லப்பட்ட     ஐந்து   பணியாளர்களில்   மூவராவர்.

மற்ற  இருவரும்-   தாயுடின்,46,   அப்ட்   ரகிம்   சும்மாஸ்,63,-   ஏற்கனவே  கடந்த  வீயாழக்கிழமை   பிலிப்பினோ  படைவீரர்களால்   காப்பாற்றப்பட்டு  விட்டனர்.

நேற்றிரவு  கேஎல்   அனைத்துலக   விமான  நிலையம் வந்தடைந்த   அவ்விருவரும்    பல   மாதங்களுக்குப்   பிறகு தங்கள் குடும்பத்தினருடன் இணைந்தனர்.

இன்று  காலை   எட்டு   மணிக்குப்   பிரதமர்   நஜிப்    அப்துல்    ரசாக்,   தாமான் டூத்தாவில்    உள்ள தமது    அதிகாரத்துவ    இல்லத்தில்  அவ்விருவரையும்  சந்தித்தார்.

பிரதமரின்  துணைவியார்   ரோஸ்மா  மன்சூரும்   அப்போது   அங்கிருந்தார்.

–பெர்னாமா