அன்வார் மருத்துவமனை சென்று வான் அசிசாவைக் கண்டார்

anwarசிறைத்  தண்டனை   அனுபவித்து   வரும்   முன்னாள்  எதிரணித்  தலைவர்    அன்வார்  இப்ராகிம்     மருத்துவமனையில்  உள்ள      அவரின்  துணைவியார்   டாக்டர்   வான்   அசிசாவைச்  சென்று  காண்பதற்கு  நேற்றிரவு   அனுமதிக்கப்பட்டார்.

அன்வார்    குடும்பத்தார்    அவர்   மருத்துவமனை   சென்றுவர    அனுமதி  கேட்டு    செய்து  கொண்டிருந்த   விண்ணப்பத்தை   ஏற்று   சுங்கை பூலோ   அதிகாரிகள்   அவருக்கு   அனுமதி    வழங்கியதாக   பெரித்தா   ஹரியான்   கூறியது.

நேற்று  மருத்துவமனையில்   சேர்க்கப்பட்ட    வான்   அசிசா,64,  திடமாக   இருப்பதாகவும்   சிகிச்சை  பெற்று  வருவதாகவும்   அன்வாரின்   உதவியாளர்   கூறினார்.

ஆனால்,  அவர்   எதற்குச்    சிகிச்சை   பெற்று    வருகிறார்    என்ற   விவரம்   தெரிவிக்கப்படவில்லை.
அன்வார்   சுமார்   45  நிமிடம்  மருத்துவமனையில்   இருந்ததாக   அவரின்   மகள்   லெம்பா  பந்தாய்   எம்பி   நுருல்    இஸ்ஸா   தெரிவித்ததாக    பெரித்தா  ஹரியான்  கூறிற்று