உணவூட்டும் கரத்தைக் கடித்து விடாதீர்கள்: அரசுப் பணியாளர்களுக்கு அறிவுறுத்து

aliஅரசுப்  பணியாளர்கள்   அரசாங்கம்    குறித்துப்   பரப்பப்படும்   பொய்களை   நம்பக்   கூடாது,    உணவூட்டும்  கரத்தைக்  கடித்து  விடக்  கூடாது    என்று   அரசாங்கத்   தலைமைச்   செயலாளர்    அலி   ஹம்சா    வலியுறுத்தியுள்ளார்.

உலகப்   பொருளாதாரச்  சூழல்   நிச்சயமற்றுள்ள   வேளையில்     பிரதமர்   நஜிப்   அப்துல்  ரசாக்கின்  அரசாங்கம்    பல   வசதிகளை    அவர்களுக்குச்   செய்து   கொடுத்துள்ளது    என்றாரவர்.

“அரசாங்கம்   மக்களுக்கும்   அரசுப்  பணியாளர்களுக்கு    எவ்வளவோ   செய்துள்ளதால்   அரசுப்   பணியாளர்கள்   அரசாங்கத்துக்கு    ஆதரவாக   இருக்க    வேண்டும்    என்று    வலியுறுத்துகிறேன்.

“மக்களுக்குச்   சேவை    செய்வதன்வழி    நாம்   அரசாங்கத்துக்கு    ஆதரவாக   இருக்க   வேண்டும்.  உற்பத்தித்   திறனைப்  பெருக்கியும்    மக்களுக்கு   அரசாங்கம்  செய்து  கொடுக்க   நினைப்பதைச்   செய்து   கொடுப்பதன்   மூலமும்   அரசாங்கத்துக்கு   ஆதரவாக   இருக்க   வேண்டும்.

“நமக்கு  உணவளிக்கும்    கரத்தைக்  கடித்து  விடக்கூடாது.  அரசாங்கத்தை   வீழ்த்த    பொறுப்பற்ற   தரப்பினர்   அள்ளிவிடும்  பொய்களை   நம்பி   விடக்கூடாது”,   என்றவர்   இன்று  மாலை   கோலாலும்பூரில்   ஒரு  நிகழ்வில்     கூறினார்.