பிரதமர் ஐந்து நாள் இந்தியா பயணம்

najibபிரதமர்   நஜிப்   அப்துல்   ரசாக்,  வெள்ளிக்கிழமை   தொடங்கி   செவ்வாய்க்கிழமை    வரை   இந்தியாவுக்கு   5-நாள்   அதிகாரத்துவ   வருகை   மேற்கொள்வது   60  ஆண்டுகளாக   இரண்டு   நாடுகளுக்குமிடையில்   இருந்து   வரும்  வலுவான   இரு   தரப்பு   உறவுகளுக்கு   நல்ல   சான்று.

இது   2009-இல்   பிரதமரான  நஜிப்பின்  மூன்றாவது   இந்தியப்   பயணமாகும்.  இந்திய  பிரதமர்   நரேந்திர   மோடியின்   அழைப்பின்பேரில்   அவர்  இப்பயணத்தை   மேற்கொள்கிறார்.

இது,  மலேசியாவும்   இந்தியாவும்   இருதரப்பு,  வட்டார,  அனைத்துலக   விவகாரங்கள்  குறித்து    கருத்துப்  பரிமாற்றம்   செய்துகொள்ள   வாய்ப்பாக  அமையும்   என   வெளியுறவு   அமைச்சின்   அறிக்கை   கூறியது..

இப்பயணத்தின்போது   நஜிப்   சென்னை,  புதுடில்லி,   ஜெய்ப்பூர்   ஆகியவற்றும்   செல்வார்.

பிரதமருடன்   அவரின்  துணைவியார்  ரோஸ்மா   மன்சூர்,  வெளியுறவு   அமைச்சர்     அனிபா   அமான்,   அமைச்சர்கள்,   உயர்   அதிகாரிகள்   ஆகியோரும்   செல்வர்.

அரசாங்கத்   தலைவர்களுடன்  இருதரப்பு   உறவுகள்   பற்றிப்   பேசுவதுடன்   நஜிப்   இந்திய    தொழில்     அதிபர்களையும்   சந்திப்பார்.