இன்று நள்ளிரவிலிருந்து எரிபொருள் விலை குறைகிறது

 

petrolpricewednesdayஒவ்வொரு புதன்கிழமையும் எரிபொருள் விலை குறித்த அறிவிப்பு செய்யும் திட்டத்தின் கீழ் இன்றைய முதல் அறிவிப்பு எண்ணெய் விலை குறைக்கப்படுவதாக கூறுகிறது.

இந்த அறிவிப்பின்படி, ரோன்95, ரோன்97 மற்றும் டீசல் ஆகியவற்றின் சில்லறை விலை ஒரு லீட்டருக்கு முறையே 17 சென், 19 சென் மற்றும் 9 சென் குறைக்கப்படுகிறது.

ஒரு லீட்டர் ரோன்95 ரிம2.13, ரோன்97 ரிம2.41 மற்றும் டீசல் ரிம2.11 க்கு பெட்ரோல் நிலையங்களில் விற்கப்படும்.

இந்தப் புதிய விலை இன்று நள்ளிரவிலிருந்து அமலுக்கு வருகிறது.