பரிசோதனை செய்யப்பட்ட 23,583 மாணவர்களில் 825 பேர் போதைப் பொருள் உட்கொள்பவர்கள்

drugsஇவ்வாண்டின்  முதல்  காலாண்டில்   இடைநிலைப்  பள்ளி     மாணவர்கள்  23,583  பேரிடம்  சோதனை   செய்ததில்    அவர்களில்  825  பேர்   போதைப்  பொருள்  உட்கொள்வது    தெரிய   வந்ததாக   உள்துறை   துணை   அமைச்சர்    நூர்  ஜஸ்லான்   முகம்மட்   கூறினார்.

அவர்களில்   சிலர்    போதைப்பொருள்களை   விற்பனை  செய்தும்  வருகிறார்கள்.

“அவர்களைப்  பிடிப்போம்.  பள்ளீகளில்   போதைப்பொருள்   பிரச்னையை  ஒழித்துக்  கட்டும்   பொறுப்பு  தேசிய    போதைப்பொருள்   தடுப்பு    வாரிய(ஏஏடிகே)த்திடம்   ஒப்படைக்கப்பட்டுள்ளது”,  என    நூர்   ஜஸ்லான்  கூறினார்.