எயிட்ஸ் நோய்க்கு மருந்து கண்டுபிடித்து சாதனை உச்சத்தில் நின்ற தமிழன்..!

aids-1உலகத்திலேயே மிகக் கொடிய நோய் என்று கருதப்படுகிறது இந்த எயிட்ஸ் நோய்.

இந்த நோய்க்கு இதுவரை சரியான மருந்து கண்டுபிடிக்கவில்லை என்பது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில், இந்நிலையில், இந்த மிகக் கொடிய நோயினை உண்டாக்கும் எச்.ஐ.வி என்ற கிருமியை அழிக்கக் கூடிய மருந்தைக் கண்டறிந்த சாதனை புரிந்துள்ளார் தமிழகத்தைச் சேர்ந்த மூலிகை ஆராய்ச்சியாளர் மாதேஸ்வரன்.

ஈரோடு மாவட்டத்தினை சேர்ந்த எஸ். மாதேஸ்வரன் என்னும் மூலிகை ஆராய்ச்சியாளர் 30 ஆண்டுகளாக மூலிகை ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார்.

2008 முதல் 2011 ஆண்டு வரை இவர் மேற்கொண்ட ஆராய்ச்சியில் இரத்தம் போன்ற உடல் திரவங்கள் மூலம் பரவும் இந்த வைரஸினை அழிக்கும் மருந்தினை தயாரித்துள்ளார்.

ஈரோட்டில் உள்ள பெருந்துறை மருத்துவ கல்லூரி, சென்னை எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலை கழகம், மும்பையில் உள்ள ரெலிகேர் நிறுவனம் ஆகியவற்றில் உள்ள ஆய்வுக்கூடங்களில் ஆய்வினை மேற்கொண்டு தயாரித்துள்ள இந்த மூலிகை மருந்தினை எய்ட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்ட 3 பேருக்கு கொடுத்து உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்த மூலிகை மருந்தினை மூன்று மாதங்களுக்கு உட்கொண்டால் நோய் ஆற்றல் அதிகரித்து எச்ஐவி, எச்பிவி கிருமிகள் அழிக்கப்படுகிறது. மிக குறைந்த செலவில் இந்த மருந்தினை தயாரிக்க முடியும் என கூறியுள்ளார்.

மேலும் நீரிழிவு நோயிற்கு திரிபலா மற்றும் நன்னாரியினை கொண்டு மூலிகையினை தயாரித்துள்ளார். தொடர்ந்து 4 மாதங்கள் இதனை உட்கொண்டால் நீரிழிவு நோய் முற்றிலும் குணப்படுத்த இயலும் என குறிப்பிட்டுள்ளார்.

-manithan.com

SHARE THIS STORY :    

   

உங்கள் கருத்துகளை பதிவுசெய்யுங்கள் (Share Your Comments)

விதிமுறைகள்: கருத்து ஆபாசமானதாக, அருவருக்கத்தக்கதாக, பிறரை அல்லது பிறரது சமயத்தை, சமூகத்தை இழிவுபடுத்துவதாக இருக்கக்கூடாது. அவ்வாறான கருத்துகள் அனுமதிக்கப்படாது. கருத்து சுருக்கமாகவும் பொறுப்புடனும் தெரிவிக்கப்பட வேண்டும். நீங்கள் பதிவு செய்யும் கருத்துக்கு நீங்களே முழு பொறுப்பாளி.

கருத்துகளை தமிழில் தட்டச்சு செய்ய முடியும். உதாரணம் : "amma" என்று டைப் செய்து SPACEBAR-ஐ அழுத்தினால் "அம்மா" என்று தோன்றும் (Press Ctrl+g to toggle between English and Tamil)