சுப்ரா: ஸக்கீரின் சமயச்சொற்பொழிவு பிரிவினைச் சக்திகளை தூண்டிவிடுகிறது, ஒற்றுமையைக் கெடுக்கிறது

 

subradrஇஸ்லாமிய சமயச்சொற்பொழிவாளர் ஸக்கீர் நாய்க்கை மலேசியாவுக்கு ஒரு “தவிர்க்கக்கூடிய குழப்பம்” என்று வர்ணித்ததோடு அவர் நாட்டின் ஒற்றுமையை கீழறுக்கூடும் என்று சுகாதார அமைச்சர் டாக்டர் எஸ். சுப்ரமணியம் எச்சரித்தார்.

“மலேசியாவின் இஸ்லாமிய அடித்தளம் அல்லது அதன் பலசமய தேசிய நயம் ஸக்கீர் நாய்க்கின் சமய போதனையால் நிச்சயமாக பேணப்படப்போவதில்லை.

“மாறாக, அது இந்நாட்டில் தற்போது பின்பற்றப்பட்டுவரும் இஸ்லாமிய ஒன்றுபடுத்தும் கோட்பாடுகளை சிதைக்கும் பிரிவினைச் சக்திகளைத் தூண்டிவிடும்”, என்று அமைச்சர் சுப்ரமணியம் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறுகிறார்.

SHARE THIS STORY :    

RELATED POSTS

No related posts found!

   

உங்கள் கருத்துகளை பதிவுசெய்யுங்கள் (Share Your Comments)

விதிமுறைகள்: கருத்து ஆபாசமானதாக, அருவருக்கத்தக்கதாக, பிறரை அல்லது பிறரது சமயத்தை, சமூகத்தை இழிவுபடுத்துவதாக இருக்கக்கூடாது. அவ்வாறான கருத்துகள் அனுமதிக்கப்படாது. கருத்து சுருக்கமாகவும் பொறுப்புடனும் தெரிவிக்கப்பட வேண்டும். நீங்கள் பதிவு செய்யும் கருத்துக்கு நீங்களே முழு பொறுப்பாளி.

 • singam wrote on 21 April, 2017, 6:12

  தற்ப்போது ஜாக்கிருக்கு நம் நாட்டில் நிரந்தர வசிப்பிட தகுதி கொடுக்கப்பட்டுள்ளது. கூடிய விரைவில் அவரை இந்நாட்டு பிரஜை ஆகிவிடுவோம். நம் நாட்டில் சமய சகிப்புத்தன்மையை குழைத்து விடுவோம். உங்களால் என்னய்யா செய்ய முடியும்?

 • PalanisamyT wrote on 21 April, 2017, 7:28

  1. இப்படி பொதுவாகப் பேசுவதால் என்னப் பயன்; இந்திய சமுகத்தின் சார்பாக, மலேஷிய மக்களின் நலன்கள் கருதி இந்த எச்சரிக்கையை அமைச்சரைவையின் கவனத்திற்கு கொண்டுச் சென்றிருந்தால் வரவேற்றிருக்கலாம்; நம் பிரச்சனைகள்; நம் நியாயமான உரிமைகளை, கோரிக்கைகளை பாதிப்புக்களை அமைச்சரைவையின் கவனத்திற்குக் கொண்டுச் செல்ல வேண்டுமென்றால் நமக்கு குறைந்தது இரண்டு முழு அமைச்சர்களாவது இருக்க வேண்டுமே. ஒருவர் முன்மொழிய வேண்டும்; இன்னொருவர் வழிமொழிய வேண்டும்; 2. அன்று தேசத் தந்தை, சுதந்திரத் தந்தை துங்கு அவர்கள் முதன் மந்திரியாகயிருந்தக் காலத்தில் இருந்த 11 பேர்கள் கொண்ட அமைச்சரவையில் இரண்டு இந்திய அமைச்சர்கள் இருந்தார்கள்; ஆனால் இன்று அமைச்சரவை விரிவாக்கப் பட்டும் நமக்கு ஒரே ஒரு அமைச்சர்தான். இதை முதலில் சரிச் செய்யுங்கள். அப்புறம் வெளிப்படையான அறிக்கை விடுங்கள். அப்போதுதான் நமக்கு மரியாதை. பொதுத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் இப்படிப் பேசினால்தான் இந்திய சமுகத்த்தின் ஆதரவைப் பெறலாமென்று நினைத்து இப்படிப் பேசியிருப்பீர்களோ!

 • RAHIM A.S.S. wrote on 21 April, 2017, 9:43

  மலேசிய அரசாங்கம் ஸக்கீர் நாய்க்கு நிரந்திர வசிப்பிட தகுதி கொடுத்தபோது மயிரை புடுங்கிட்டு இருந்தேயா இல்லை சப்பிக்கிட்டு இருந்தேயா  என்றெல்லாம் ஆபாசமாக எழுதும் அளவுக்கு இந்தியர்களை உசுப்பி விடாதே  மாங்காய் இழிஇன கட்சியின் தலைவரான சூப்பி(டு)மணியே  

 • சாக்ரடீசு wrote on 21 April, 2017, 10:05

  ஐயா நீங்கள் பயந்து பயந்து கருத்து தெரிவித்திருப்பது புரிகின்றது. அவனால் நாட்டில் ஒற்றுமை சீகுலைக்ன்றதா அல்லது சீர்படுகின்றதா என்ற கவலை இப்போது நமக்கு வேண்டாம். இங்கேயே பிறந்து பிறப்புப் பத்திரத்துக்கும் (அது இல்லாத காரணத்தால் பள்ளியில் இடம் கிடைக்கவில்லை), அடையாளப் பத்திரத்துக்கும், நீல நிற அடையாளக்கார்டுக்கும், குடியுரிமைக்கும் நம்மவர்கள் காலம் காலமாக காத்துக் கிடக்கும் போது நேற்று வந்த இத்தகைய காளான்களுக்கும் புல்லுருவிகளுக்கும் நிரந்தர வசிப்பிடத் தகுதி (ஐந்தாறு ஆண்டிகளுக்கு முன்பே கிடைத்து விட்டது என்று உள்துறை அமைச்சர் சொல்கிறார்) மிக எளிதாக கிடைத்து விடுகின்றதே அது எப்படி? உண்மை நிலைமை இப்படி இருக்கும்போது அடுத்த பொதுத்தேர்தலுக்கு இந்திய சமுதாயத்திடம் என்ன சொல்லி ஓட்டுக்குக் கையேந்துவது என்று நம்பிக்கை நாயகனிடம் என்றைக்காவது பேசியது உண்டா?

 • abraham terah wrote on 21 April, 2017, 11:23

  பயந்து விடாதீர்கள்! அவர் அம்னோவிடம் கேட்டுவிட்டு தான் அறிக்கை விட்டிருக்கிறார்! பல வருடங்களாக பேசப்படுகின்ற ஒரு விஷயத்தை தேர்தல் வரப்போகின்ற நேரத்தில் அறிக்கை விடுகிறார்! இனி கொஞ்ச காலத்திற்கு அறிக்கைகள் மூலம் இந்த சமுதாயத்திற்கு நிறையவே செய்வார்! எதிர்பாருங்கள்!

 • Dhilip 2 wrote on 21 April, 2017, 12:16

  சாமிவேலு காலத்தில் மறந்தும் வாயை திறக்காதவர் நீங்கள் … முதலில் ஒரு தலை பட்சமாக மதம் மாறும் பெட்றோர்களின் நிலையை காபினெட் மீட்டிங்கில் பேசுவேன், அதுவும் குழந்தைகளின் மதமாற்று விஷயங்களை பேசுவேன் என்று முன்பு விடட அறிக்கை என்ன காலாவதி ஆனதா ? இப்பொழுது புது அறிக்கையா ? இப்படி அறிக்கை விட்டே 14 பொது தேர்தலை முடித்து விடுவீர்களா ? அதோடு இன்னமும் ௫ ஆண்டுகளுக்கு வாயை திறக்க மாடீர்கள் ….. அப்படித்தானே ? இந்தமானகெடட பொழப்பு தேவையா ?

 • s.maniam wrote on 21 April, 2017, 13:48

  ZAKIR NAIK ‘S PR STATUS NONE OF YOUR BUSINESS ( PAS NASARUDIN HASAN )
  எதிர் கட்சியை சேர்ந்த எந்த உரிமையும் இல்லாத ஒரு இன வாதி உம்மை இப்படி கூறுகிறான் ! நீர் ஆளும் கட்சியின் முழு அமைச்சர் ! உமக்கு எல்லா உரிமையும் இருக்கிறது ! இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்புங்கள் இந்த சமுதாயம் உமக்கு பின்னால் பக்க பலமாக இருக்கும் ! இந்து சமய காப்பாளர்கள் ! இந்து சங்கங்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றனர் ! அதன் தலைவர்கள் எங்கே மானியத்திற்கு கை ஏந்தி கொண்டிருக்கிறார்களா !! பாஸ் காரனும் , அம்னோ காரனும் மதம் என்றதும் ஒன்று படுகிறான் ! நம்மவனுக்கு ஏன் அந்த புத்தி இல்லை ! அடுத்த நாட்டில் குற்றவாளி ! இந்த நாட்டில் விருந்தாளி ! தைரியம் இருந்தால் இந்து சங்கம் காவல் நிலையத்தில் புகார் செய்யட்டும் !!

 • raja wrote on 21 April, 2017, 14:53

  கூடிய விரைவில் ஒரு செனட்டர் பதவி கொடுத்து பேசாதே என்றல் முடிஞ்சிருச்சு

 • அலை ஓசை wrote on 21 April, 2017, 16:10

  Zakir Naik-ku அமைச்சர்பதவிக்கு பாஸ்
  சிபார்சு செய்யும்.அதிகாரம் அவர்களது 
  கையில்,நீதிமன்றமும் நாடாலுமன்ற கட்டுப்பா
  ட்டில்,தலைகளோடுபோட்டோ,தேவைப்பட்டால்
  காவல்துறைபாதுகாப்பும் தருவார்கள்.
  தோழமைகட்சிகளால் அம்னோவை எதிர்த்து
  ஒரு ஆணியையும் புடுங்க முடியாது.

 • s.maniam wrote on 21 April, 2017, 17:41

  அவனுக்கு அரசாங்கம் நிரந்திர வசிப்பிடம் தரட்டும் அல்லது குடி உரிமை தரட்டும் ! அது நமக்கு தேவை யற்றது ! அவன் இந்து மதத்தை பட்றி பேசினால் அவனுக்கு எதிராக புரட்சி வெடிக்கும் என்று நாடாளுமன்றத்தில் முழங்குங்கள் !! தானை தலைவன் ? புரட்சி தலைவன் ? மக்கள் தலைவன் ? உமக்கு என்ன பட்டம் தெரியவில்லையே !!

 • iraama thanneermalai wrote on 21 April, 2017, 18:25

  தேர்தல் நெருங்குகின்ற இந்த தருணத்தில் மந்திரிசபை கூடும்போது இரு கோரிக்கைகளை அமைச்சர் வைக்கலாம்.௧.பற்பல ஆண்டுகள் இங்கு வாழ்ந்து இன்னும் சிகப்பு அடையாள கார்டுகளை நீலத்திற்கு மாற்றி அவர்கள் வாழ்வில் நிம்மதியை ஏற்படுத்த வேண்டும் .௨ பிற்ப்பு பத்த்ரம் இல்லாத ஒரே காரணத்திற்காக அந்த இளம் பிஞ்சுகளின் கல்விக்கு அரசு தடையாக இருக்கக்கூடாது .அவர்கள் கல்வி நாட்டிற்கு நன்மை பயக்கும் .அவர்களுக்கு தற்காலிக அடையாள அட்டை வழங்கி கல்வியை தொடர வாய்ப்பு அளிக்க வேண்டும் .கல்வியை தொடர முடியாத நிலையில் குற்ற செயல்களில் ஈடுபட்டு சிறை சென்று அனாதையாக அடிபட்டு சாக வேண்டாம் .

 • seliyan wrote on 21 April, 2017, 20:48

  நிரந்தர வசிப்பிட தகுதி கொடுக்கப்பட்டுள்ளது தெரிந்தும் இப்பொழுது ஒப்பாரி எதற்கு? காலம் கடந்த ஒன்று உங்களது அறிக்கை.

 • மலேசியன் wrote on 22 April, 2017, 16:04

  https://www.facebook.com/100010243307808/videos/448463852171721/

 • seliyan wrote on 23 April, 2017, 21:06

  போதும் உங்கள் நாடகம் வாய் திறக்காமல் இருப்பது நல்லது.அடுத்த தேர்தல் உங்கள் பங்காளிகளுக்கு பதில் கிடைக்கும்.

கருத்துகளை தமிழில் தட்டச்சு செய்ய முடியும். உதாரணம் : "amma" என்று டைப் செய்து SPACEBAR-ஐ அழுத்தினால் "அம்மா" என்று தோன்றும் (Press Ctrl+g to toggle between English and Tamil)