தொடரும் போராட்டத்தினால் நெருக்கடியில் அரசாங்கம்!

vikneswaran_4காணாமல் போனோர் குறித்த விடயத்திற்கு அரசாங்கம் உரிய பதில் வழங்காதிருப்பதாக வடக்கு முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவில் 41 நாட்களாக போராட்டத்தை நடத்தி வருகின்ற காணாமல் போனோரை சந்தித்த போது அவர் இந்த விடயத்தைக் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்…

அரசாங்கத்துக்கு பாதகத்தை ஏற்படுத்தும் என்ற நிலையிலேயே காணாமல் போனோர் குறித்த விடயத்துக்கு அரசாங்கம் பதில் கூறாதிருக்கின்றது.

கொலை செய்து விட்டோம் என்றோ அல்லது இந்த இடத்தில் தடுத்து வைத்திருக்கிறோம் என்றோ, அரசாங்கம் பதில் கூறினால், அது அரசாங்கத்துக்கோ சிக்கலை ஏற்படுத்தும். இதனாலேயே அரசாங்கம் இந்த விடயத்தில் மௌனமாக இருக்கிறது.

எவ்வாறாயினும் இந்த விடயத்தில் உரிய அழுத்தங்களை பிரயோகித்து நடவடிக்கை எடுத்து வருகின்றோம் என வடக்கு முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

-http://www.tamilwin.com

SHARE THIS STORY :    

   

உங்கள் கருத்துகளை பதிவுசெய்யுங்கள் (Share Your Comments)

விதிமுறைகள்: கருத்து ஆபாசமானதாக, அருவருக்கத்தக்கதாக, பிறரை அல்லது பிறரது சமயத்தை, சமூகத்தை இழிவுபடுத்துவதாக இருக்கக்கூடாது. அவ்வாறான கருத்துகள் அனுமதிக்கப்படாது. கருத்து சுருக்கமாகவும் பொறுப்புடனும் தெரிவிக்கப்பட வேண்டும். நீங்கள் பதிவு செய்யும் கருத்துக்கு நீங்களே முழு பொறுப்பாளி.

கருத்துகளை தமிழில் தட்டச்சு செய்ய முடியும். உதாரணம் : "amma" என்று டைப் செய்து SPACEBAR-ஐ அழுத்தினால் "அம்மா" என்று தோன்றும் (Press Ctrl+g to toggle between English and Tamil)