யுஎம் விரிவுரையாளர் அவரின் இனவாதக் கருத்துகளுக்காக மாணவர்களிடம் மன்னிப்பு கோரினார்

 

Apologyfromlecturerயூனிவர்சிட்டி மலாயா (யுஎம்) விரிவுரையாளர் ஒருவர் அவர் கூறிய இனவாதக் கருத்துகளுக்கான மாணவர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.

யுஎம் துணை வேந்தர் முகமட் அமின் ஜலாலுடின் மலேசியாகினிக்கு கொடுத்துள்ள ஓர் அறிக்கையில் அந்த விரிவுரையாளருக்கும் மாணவர்களுக்குமிடையில் ஒரு கூட்டம் நடந்தது என்று கூறியுள்ளார். அவரும் அக்கூட்டத்தில் கலந்துகொண்டார்.

அக்கூட்டம் மார்ச் 30 இல் நடந்தததை யுஎம் பேச்சாளர் ஒருவர் உறுதிப்படுத்தினார்.

அக்கூட்டத்தில் அந்த விரிவுரையாளர் வாய்மொழி மற்றும் எழுத்து மூலமாக மன்னிப்பு கேட்டுக்கொண்டார் என்று அமின் கூறினார்.

கடந்த பெப்ரவரியில், “ஓர் இந்திய மாணவனின் குரல்” என்ற ஒரு முகநூல் பதிவில் அந்த விரிவுரையாளர் இரண்டு இந்திய மாணவர்களை அடுத்தடுத்து உட்காரவிடாமல் தடுத்து விட்டார், ஏனென்றால் இந்தியர்கள் பார்த்து எழுதுவதிலும் எழுத்துத் திருட்டிலும் விருப்பமுள்ளவர்கள் என்று கூறப்பட்டிருந்தது.

மேலும், “இந்தியர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று தெரியும்” என்று அந்த விரிவுரையாளர் கூறியதாகவும் அந்த முகநூல் பதிவில் குறைகூறப்பட்டிருந்து.

நடந்த சம்பவத்திற்காக அந்த விரிவுரையாளர் வருத்தப்பட்டதாகவும், அவர் இனவாதப் பிரச்சனையை எழுப்பும் நோக்கத்தை கொண்டிருக்கவில்லை. எதிர்காலத்தில் மிகக் கவனமாக இருப்பதற்கு அவர் உறுதியளித்துள்ளார் என்று அமின் மேலும் கூறினார்.

SHARE THIS STORY :    

RELATED POSTS

No related posts found!

   

உங்கள் கருத்துகளை பதிவுசெய்யுங்கள் (Share Your Comments)

விதிமுறைகள்: கருத்து ஆபாசமானதாக, அருவருக்கத்தக்கதாக, பிறரை அல்லது பிறரது சமயத்தை, சமூகத்தை இழிவுபடுத்துவதாக இருக்கக்கூடாது. அவ்வாறான கருத்துகள் அனுமதிக்கப்படாது. கருத்து சுருக்கமாகவும் பொறுப்புடனும் தெரிவிக்கப்பட வேண்டும். நீங்கள் பதிவு செய்யும் கருத்துக்கு நீங்களே முழு பொறுப்பாளி.

 • சாக்ரடீசு wrote on 21 April, 2017, 16:54

  நம் இனம், மதம், மொழி இவற்றைக் கேவலப்படுத்துவதும் அதன் பின் மன்னிப்பும் வருத்தமும் கோருவதும் மீண்டும் மீண்டும் நடந்து கொண்டேதான் இருக்கின்றன. இனியும் தொடர்ந்து நடக்கும். நாம் தான் கையாலாகாதவர்களாச்சே..

 • s.maniam wrote on 21 April, 2017, 17:19

  இதுவெல்லாம் சாதாரணம் மப்பா !! இனவாதத்தையும் ! மத வாதத்தையும் தூண்டு வதற்கே அனுமதி அழித்து ஒருவனை நம்முடனே வைத்திருக்கிறோம் !! இவனை போன்ற புல்லுருவிகளை முதலில் களைய வேண்டும் !!

 • seliyan wrote on 21 April, 2017, 20:44

  இது ஒரு தொடர்கதை. சொல்வதும் பிறகு மன்னிப்பு கேட்பதும் அவர்களுக்கு உரிய நடைமுறை. மாற்றம் ஏற்படுத்த வேண்டியது மக்கள் கடமை.

 • Dhilip 2 wrote on 22 April, 2017, 4:06

  எனக்கும் இதே நிலைதான். நான் 5 கண்டு பிடிப்புக்களை UM காக பிரசுரித்தேன். அதுவும் ISI journal எனும் உயரிய கண்டுப்பிடிப்புக்களின் தொடர் மாத இதழில். அதற்காக டாக்டர் படம் கேட்டதிற்கு , நான் தவறுதலான முறையில் விண்ணப்பித்திருப்பதாக விளக்கம் அளித்தனர். ஆனால் UM இல் முதலில் பேராசிரியர்களை பார்த்து சம்மதம் வாங்க வேண்டும். நானும் வாங்கினேன். பிறகு கண்டுபிடிப்புக்களை பிரசுரித்த விடட பொழுது, விண்ணப்பம் செய்தேன். அப்புறம் சொல்கிறார்கள் விண்ணப்பம் செய்த முறையில் தவறு என்று. நான் கண்டு பிடித்து பிரசுரம் செய்தவற்றுக்கு ஒத்த காசு கிடையாது…. ஆனால் மற்றவர்கள் 5 கண்டு பிடிப்புக்களை கொடுத்தால் அவர்களுக்கு டாக்டர் படம் …. எல்லாம் விதி …

 • abraham terah wrote on 22 April, 2017, 9:33

  நண்பரே! அது விதி அல்ல! அதை விட இன்னும் உயரிய நிலைக்கு நீங்கள் போவதற்கான வாய்ப்பு!

கருத்துகளை தமிழில் தட்டச்சு செய்ய முடியும். உதாரணம் : "amma" என்று டைப் செய்து SPACEBAR-ஐ அழுத்தினால் "அம்மா" என்று தோன்றும் (Press Ctrl+g to toggle between English and Tamil)