டிஏபியின் பாட்டுக்குத் தாளம் போடும் அமைச்சர்: பாஸ் சாடல்

pasஜாகிர்  நாய்க்குக்கு   நிரந்தர  வசிப்பிடத்   தகுதி    கொடுக்கப்பட்டது    “வருந்ததத்தக்கது”   எனக்  குறிப்பிட்டிருக்கும்   அமைச்சரை    பாஸ்   உலாமா   தகவல்     தலைவர்    முகம்மட்    கைருடின்  அமான்   ரசாலி   கடிந்து   கொண்டார்.

“இஸ்லாத்தைக்   குறைகூறும்   டிஏபி-இன்   அரசியல்    பாணியைக்  கூட்டரசு   அமைச்சர்களும்   பின்பற்றுவது   கவலை  அளிக்கிறது”,  என்றாரவர்.

அமைச்சரவை   எல்லா   விசயங்களிலும்   கூட்டாகத்தானே   முடிவெடுக்கும்.  அமைச்சர்  குறைப்பட்டுக்  கொண்டிருப்பதைப்   பார்த்தால்   இவ்விவகாரத்தில்   கூட்டாக  முடிவெடுக்கும்   முறை    தோற்றுப்போனதாக   அல்லவா   தெரிகிறது    என்றார்.

குறைகூறைய    அமைச்சரின்   பெயரை   கைருடின்   குறிப்பிடவில்லை.  ஆனால்,   இவ்விவகாரம்  குறித்துக்  கேள்வி    எழுப்பிய    மஇகா    தலைவரும்    சுகாதார  அமைச்சருமான   டாக்டர்   எஸ். சுப்ரமணியதை    பாஸ்  தொடர்ந்து   சாடி   வந்துள்ளது.

2013   எடுக்கப்பட்ட   முடிவு   குறித்து   அமைச்சர்  சுப்ரமணியம்    அறியாதிருப்பது    எப்படி    என்று    அது   வினவியது.