இந்தியர்களுக்கு பல மில்லியன்கள், அது தேர்தலுக்காக அல்ல என்கிறார் நஜிப்

 

Najibblueprintநாட்டின் இந்திய இனத்தினருக்கு உதவுவதற்காக பல மில்லியன் ரிங்கிட்களை ஒதுக்கீடு செய்துள்ளதாக பிரதமர் நஜிப் ரசாக் இன்று அறிவித்தார்.

புத்ரா உலக வாணிப மையத்தில் மலேசிய இந்தியர் பெருந்திட்டத்தைத் தொடங்கி வைத்த நஜிப், இதெல்லாம் ஒரு நாடகம் என்பதை மறுத்ததோடு இது ஒரு கடும் முயற்சி என்றார்.

இந்த அறிவிப்புக்கும் எதிர்வரும் தேர்தலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறிய அவர், இந்த இந்தியர் பெருந்திட்டத்தை தாக்கல் செய்வது பற்றிய வாக்குறுதியை 11 ஆவது மலேசியத் திட்டத்தை மே 2015 இல் தாக்கல் செய்தபோது அளித்ததாக கூறினார்.

இதற்கும் தேர்தலுக்கும் சம்பந்தம் இல்லைதான், ஆனால் இந்தியர்கள் பாரிசானை ஆதரிக்க விரும்பினால் அதைத் தடுக்க மாட்டேன் என்று அங்கு குழுமியிருந்த 2000 பேரின் சிரிப்பு அலைக்களுக்கிடையே நஜிப் தெரிவித்தார்.

நஜிப் வெளியிட்ட இப்பெருந்திட்டத்தில், ரிம20 மில்லியன் உயர்க்கல்வி உதவிக்கும், ரிம350 மில்லியன் தொழில்முனைவர்கள் கடன் பெறுவதற்கான ஒரு சுழல் நிதியை அமைப்பதற்கும், ரிம500 மில்லியன் பெர்மோடலான் நேசனல் பெர்ஹாட்டின் கீழ் வைத்து இந்தியச் சமூகத்தின் கீழ்மட்ட 40 விழுக்காடு வருமானம் பெறுபவர்களுக்கு (B40) உதவுவதை இலக்காகக் கொண்டுள்ளது.

இந்த 10-ஆண்டு பெருந்திட்டம் ஓர் அரசியல் வாய்ப்பந்தல் என்பதை மறுத்த பிரதமர் நஜிப், “இது வெட்டிப் பேச்சு இல்லை”, மாறாக “இது நிஜம்” என்று தமிழில் கூறி அங்கிருந்த அவரது ரசிகர்களை அகமகிழச் செய்தார்.

நஜிப் அவரது உரையின் தொடக்கத்தில் இந்தப் பெருந்திட்டத்தை தயாரிக்க கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் தேவைப்பட்டது, ஏனென்றால் இதற்கான கோட்பாடுகள், புள்ளிவிபரங்கள், எண்கள் மற்றும் பரிந்துரைகள் அரசாங்கத்திடமிருந்து வருவதற்காக மாறாக அடிமட்ட மக்களிடமிருந்து வர வேண்டும் என்று அரசாங்கம் விரும்பியது என்றாரவர்.

இந்தியர்களின் சமூக-பொருளாதார தரத்தை மேம்படுத்துவதற்கான கொள்களை அமல்படுத்துவதற்கு அரசாங்கம் கொண்டுள்ள ஈடுபாட்டிற்கு இந்தப் பெருந்திட்டம் ஆதாரமாகும் என்று நஜிப் மேலும் கூறினார்.

“மலேசியாவின் பிறந்த 25,000 பேருக்கு குடியுரிமை இல்லை”

இன்று நஜிப் அறிவித்த பெருந்திட்டத்தில் கீழ்க்கண்டவையும் அடங்கும்:

இப்பெருந்திட்டத்தில்: உயர்க்கல்வி நிலையங்களில் இந்திய மாணவர்களின் சேர்க்கையை குறைந்தபட்சம் 7 விழுக்காடு அதிகரித்தல்;

அரசு பொதுச் சேவையில் இந்தியர்களின் பங்கேற்றலை 2026 அளவில் 7 விழுக்காட்டிற்கு உயர்த்தும் இலக்கை கொண்டிருத்தல்;

“சுதந்திரத்திற்கு முன்பு பிறந்தவர்களுக்கு குடியுரிமை அளிப்பதற்காக ஒரு சிறப்பு தடையை நீக்கும் வழிமுறையைக் காணல்.

“சுதந்திரத்திற்கு முன்பு பிறந்த 20,000 லிருந்து 25,000 பேர் இன்னும் குடியுரிமைப் பெறவில்லை. அவர்களின் உரிமையை நாம் மறுக்கக்கூடாது”, என்று நஜிப் அவரது உரையில் மேலும் கூறினார்.