ஒதுங்கிப் போகும்படி ஹராபானிடம் கூறுவது பாஸுக்கே பாதகமாக அமைந்து விடலாம்: மாபுஸ் எச்சரிக்கை

mafuzதேர்தலில்  பாஸ்  அம்னோவை   நேரடியாக    எதிர்த்துப்   போட்டியிட   இடம்விட்டு   மற்ற   கட்சிகள்   ஒதுங்கிக்கொள்ள    வேண்டும்    என்று   பாஸ்  கூறுவது   ஆணவப்  பேச்சு   அது  பாஸையே   திருப்பித் தாக்கும்   என   அக்கட்சியின்   பொக்கோக்  சேனா   எம்பி   மாபுஸ்  ஒமார்   எச்சரிக்கிறார்.

“இப்படிப்பட்ட    அறிக்கைகள்   பாஸின்மீது   நம்பிக்கையை   உண்டுபண்ண  மாட்டா. மாறாக,  பாஸ் -உறுப்பினர்   அல்லாத  வாக்காளர்களை   பாஸிலிருந்து  அன்னியப்படுத்தி    விடும்.

“பாஸின்  தீவிர   உறுப்பினர்கள்   வேண்டுமானால் (இந்த  அறிக்கைகளைக்  கண்டு)   பூரித்துப்  போகலாம்.  ஆனால்,  பாஸின்  வெற்றிக்கு   பாஸ்   உறுப்பினர்களின்   ஆதரவு    மட்டும்  போதாது”,  என்று  மாபுஸ்   குறிப்பிட்டதாக  சினார்  ஹரியான்    கூறியது.

பாஸ்  உலாமா   தகவல்   தலைவர்    முகம்மட்  கைருடின்    அமான்  ரசாலி   முகநூலில்   பதிவிட்டிருந்ததற்கு   எதிர்வினையாக   மாபுஸ்  இவ்வாறு  கூறினார்.

பாஸ்   80  நாடாளுமன்ற    தொகுதிகளில்    போட்டியிட    திட்டமிடுவதால்   பக்கத்தான்  ஹராபான்   கட்சிகளும்   பார்டி   பிரிபூமி   பெர்சத்து   மலேசியா (பெர்சத்து)வும்     அத்தொகுதிகளை  விட்டு   ஒதுங்கி  இருக்க  வேண்டும்    என்றும்   கைருடின்     தம்   முகநூல்   பதிவில்   வலியுறுத்தி  இருந்தார்.