விவசாயிகளுக்காக கனடா பிரதமர் எடுத்த முடிவால் அதிர்ச்சியான அமெரிக்கா..!

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடூ உலகத் தலைவராக மக்களால் ஏக மனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டவர்.

அமெரிக்கா உங்களை விரட்டினால் என் நாட்டிற்கு வாருங்கள் என அகதிகளுக்கு அன்போடு அழைப்பு விடுத்தவர்.

ஜஸ்டின் ட்ரூடூ எப்போதும் விவசாயத்திற்கு முன்னுரிமை அளிப்பவர். இதனால் தற்போது அவர் எடுத்துள்ள முடிவு அமெரிக்காவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

காரணம் இத்தனை நாட்களாக அமெரிக்காவின் Wisconsin, New York ஆகிய இடங்களில் இருந்து கனடாவிற்கு அதிக அளவில் பால் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது.

இதனால் கனடா பால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில் கனடா பிரதமர் புதிய கொள்ளையை வடிவமைத்துள்ளார்.

இதன் அடிப்படையில் கனடா பால் விவசாயிகள் அதிகம் நன்மை அடைந்துள்ளதோடு, அமெரிக்காவின் ஏற்றுமதிக்கும் அடி விழுந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்துள்ள டொனால்டு டிரம்ப், கனடா தங்களை அவமானப்படுத்தி விட்டதாக குற்றம்சாட்டியுள்ளார்.

ஆனால் இதற்கு அமைதியாக பதில் அளித்துள்ள கனடா பிரதமர் என் விவசாயிகளின் நலனிற்கு நான் தொடர்ந்து பாடுபடுவேன், அதே நேரம் அண்டை நாட்டுடன் மரியாதையான, முறையான அணுகுமுறையை கையாளுவேன் எனவும் கூறியுள்ளார்.

-tamilwin.com