கபாளி படத்தின் தொடர்ச்சி: மலேசியாவில் படப்பிடிப்பு வேண்டாம் என்கிறார் டிஏபி பிரதிநிதி

kabali “கபாளி”    இரண்டாம்  பகுதியைப்  படம்பிடிக்க   மலேசியா  வருமாறு   பிரதமர்   நஜிப்   அப்துல்   ரசாக்    சூப்பர்ஸ்டார்   ரஜினிகாந்துக்கு     விடுத்துள்ள   அழைப்பை  அரசாங்கம்  மறுபரிசீலனை   செய்ய    வேண்டும்     என  டிஏபி   பிரதிநிதி   ஒருவர்   கேட்டுக்கொண்டிருக்கிறார்.

நஜிப்    அண்மையில்   இந்தியாவுக்குப்  பயணம்   மேர்கொண்டிருந்தபோது    அந்த   அழைப்பை   விடுத்தார்.

மலேசியாவில்    கடந்த   ஆண்டு   வெளியிடப்பட்டு   மிகப்   பெரிய   வெற்றியைக்  கண்ட    இந்தப்    படத்தால்   விளைந்த   நன்மைகளைவிட   தீமைகளே   அதிகம்   என்று   ஸ்ரீ   டெலிமா   சட்டமன்ற   உறுப்பினர்     ஆர்.எஸ்.என். ராயர்   கூறினார்.

“மாறாக,  அரசாங்கம்    உள்நாட்டு   இந்திய  இயக்குனர்களுக்கும்   நடிகர்களுக்கும்    உதவி    உள்நாட்டு   இந்திய  திரைப்படத்துறையை  ஊக்குவிக்க   வேண்டும்.

“உள்நாட்டில்   இந்தியப்  படத்  தயாரிப்புக்கு    ஆதரவு   கொடுங்கள்.  அது  மலேசியரிடையே   ஒற்றுமை,   பணிவன்பு,   பண்பாட்டுப்  பல்வகைமை,  மூத்தோரை  மதித்தல்  முதலிய   பண்புகளை   வளர்க்கும்”,  என  ராயர்  இன்று   ஓர்   அறிக்கையில்    கூறினார்.

“கபாளி”  கலாச்சாரம்   என்ற  ஒன்று     பள்ளிகளில்   குறிப்பாக   இந்திய    மாணவரிடையே  பரவியிருப்பதாக    அவர்   குறிப்பிட்டார்.

அதன்   காரணமாகத்தான்   04,  24,  08,  36   குண்டர்  கும்பல்களில்   சேரும்   போக்கு   அதிகமாகிக்    கொண்டிருக்கிறது.

கடந்த   வாரம்  கிள்ளானில்   ஒரு   பள்ளியில்   நிகழ்ந்த    சம்பவம்   “கபாளி”  கலாச்சாரத்தின்   வெளிப்பாடுதான்   என  ராயர்  குறிப்பிட்டார்.