வட கொரியாவுடன் மோதல் நடக்க வாய்ப்புள்ளது: டிரம்ப் அதிரடி பேட்டி

வட கொரியாவுடன் அமெரிக்கா போர் மூலம் மோதல் நடத்தவே அதிக வாய்ப்பிருப்பதாக டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.

அமெரிக்கா ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் தனது நூறாவது நாளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார்.

இந்த 100 நாட்களில் வட கொரியாவின் அணு ஆயுத சோதனை, போர் மிரட்டல் தொடர்பான பிரச்சனைகள் பற்றி தான் டிரம்ப் அலுவலகம் அதிகம் விவாதித்துள்ளது.

அமெரிக்காவை தகர்ப்போம் என வட கொரியா மிரட்டி வரும் நிலையில் டிரம்ப் முக்கிய பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

அதில், வட கொரியாவுடன் மோதல் நடக்கவே அதிக வாய்ப்பிருப்பதாக கருதுகிறேன்.

மோதல் போக்கை தவிர்க்கவே நாங்கள் முன்னுரிமை கொடுப்போம். அணு ஆயுதமற்ற அமைதியான நாடாக வட கொரியா மாற வேண்டும் என்பதே எங்கள் விருப்பமாகும் என அவர் கூறியுள்ளார்.

ஆனால், இது சாத்தியமா என தெரிவில்லை என கூறியுள்ள டிரம்ப், மரணங்களையும், கொந்தளிப்புகளையும் பார்க்க தான் விரும்பவில்லை என கூறியுள்ளார்.

இதனிடையில், அமெரிக்க மக்களிடம் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், 10ல் 4 பேர் வட கொரியா, அமெரிக்காவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் நாடு என கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த இடைப்பட்ட வருடங்களில் மட்டும் வட கொரியா ஹைட்ரஜன் குண்டு சோதனை உட்பட 4 படுபயங்கர அணு ஆயுத சோதனையை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

-lankasri.com