ஸ்மார்ட் போன் பயன்படுத்துபவர்களுக்கு அதிர்ச்சி செய்தி

ஸ்மார்ட் போன்களை அதிகம் பயன்படுத்துவோருக்கு டிஜிட்டல் அம்னீசியா என்னும் நோய் பாதிப்பு ஏற்படும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

உலகளவில் ஸ்மார்ட் போன்களுக்கு அடிமையாகும் மனிதர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், ஸ்மார் போன்களை அதிகம் உபயோகப்படுத்தினால் ஏற்படும் தீமைகள் குறித்து சமீபத்தில் ஆய்வு நடத்தப்பட்டது.

அதில், ஸ்மார்ட் போன்கள் அதிகம் பயன்படுத்துவோருக்கு டிஜிட்டல் அம்னீசியா நோய் ஏற்படும் என தெரியவந்துள்ளது.

இந்நோய் பாதிப்பால், மூளையில் பதிய வைக்கும் திறன் குறைய தொடங்கும். பின்னர், நாளடைவில் முக்கியமானவர்கள் தொடர்பு எண், வீட்டு முகவரி வரை அனைத்தையும் மறக்கும் நிலை ஏற்படும் என ஆராய்ச்சி முடிவில் தெரியவந்துள்ளது.

ஸ்மார்ட் போன்களின் உபயோகத்தை குறைத்து, முக்கியமான விஷயங்களை மூளையில் பதிய வைத்து, நமது மூளை செயல்பாட்டு திறனை அதிகரிக்கச் செய்வது நலம் பெயர்க்கும் என் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

-http://news.lankasri.com